Show all

இனி கோயில்களில் தமிழில் வழிபாடு நடைபெறும்! தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆட்சிப் பொறுப்பேற்றது தொடங்கி பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். முதலாவதாக வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கும் அறிவிப்பை வெளியிட்டு பாராட்டைப் பெற்றார். தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. 

அந்தவகையில், இன்று அவர் அளித்த செய்தியாளர் சந்திப்பில் இனி தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபாடு செய்யப்படும் என்றும் கோயில்களில் வழிபாடு நிகழ்த்துனராக விரும்பும் பெண்களுக்கும் அதற்கான பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.