வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில்
முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல்
தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த
1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அரங்கநாயகம்
மீது 1 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக
புகார் எழுந்தது. இதனையடுத்து
அரங்கநாயகம், அவரது மனைவி கலைச்செல்வி மற்றும் 2 மகன்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில்
சென்னை ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான
விசாரணை நீதிஅரசர் கோமதிநாயகம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த
நீதிஅரசர், அரங்கநாயகத்தின் மனைவி மற்றும் 2 மகன்களையும் வழக்கிலிருந்து விடுவித்தார்.
வருமானத்துக்கு
அதிகமாக சொத்து சேர்த்ததாக அரங்கநாயகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஐம்பதாயிரம்
ரூபாய் அபராதம் விதித்து நீதிஅரசர் கோமதி நாயகம் உத்தரவிட்டார். மேலும், வருமானத்திற்கு
அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் நீதிஅரசர் உத்தரவிட்டார்.
இதனிடையே இந்த வழக்கில் விசாரணை
நீதிமன்றமே பிணையல் வழங்க முடியும் என்பதால் அரங்காநாயகத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கான
சொந்த பிணையும் அதே தொகைக்கான இருநபர் பிணையும் வழங்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



