21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது என்றார். காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க மறுக்கும் என்றும் அவர் கூறினார். காவிரியில் நடுவண் அரசு செய்வது மிகப் பெருங்குற்றம் என்றும் அவர் எச்சரித்தார். நடுவண் அரசை அவமரியாதையாய் பேசுவதை நாங்கள் செய்ய மாட்டோம் என்ற கமல் வெள்ளையனே வெளியேறு என்பதுதான் போதுமானது என்றார். டே! வெள்ளைக்கார நாயே வெளியேறு என்று சொல்லும் அவசியம் இல்லை என்றும் கமல் கூறினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும் என்றும் காவிரி பிரச்சனையை திசை திருப்பாதீர்கள், திசை திருப்பினால், திசை திரும்பமாட்டோம் என்றும் அவர் கூறினார். கலவரங்கள் மூலம் திசை திருப்பினாலும் திசை திரும்பமாட்டோம் என்றும் மீண்டும் கோரிக்கை வைத்து உறங்குபவர்களை எழுப்பலாம் என்றும் உறங்குபவர்களை போல நடுவண் அரசு நடிப்பதாக கமல்ஹாசன் கூறினார். ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட அவர் வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார். தொடையை தட்டுவது வீரம் அல்ல, தொடையை தட்டவும் எங்களுக்கு தெரியும் என்றும் கமல் எச்சரித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,747.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



