Show all

தமிழ்நாடு அரசுக்கு இயக்குநர் சேரன் கூறும் ஓர் ஆலோசனை! சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட

முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்திட ஓர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

05,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ்த் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் சேரன், சென்னையில் கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஒரு திட்டத்தைப் பரிந்துரைக்கிறார்.

முதல்-அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து இயக்குநர் சேரன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ‘15 நாட்களில் முடிந்து விடும் என நினைத்து சொந்த ஊருக்கு போகாமல் தயங்கியவர் நிறைய. இப்போது உறுதியாகப் போக நினைக்கிறார்கள். நலமாகவே இருக்கும் அவர்கள் ஏதோ சில காரணங்களுக்காக வெளியில் இருந்து வரும் நபர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டி உள்ளது. 

அவர்களுக்கும் அதன் மூலம் கொரோனா பரவும் அபாயம் இருக்கிறது. எனவே சென்னையில் கொரோனாவை நீங்கள் கட்டுப்படுத்த சிறந்த வழி சென்னையில் வாழும் நோய் தொற்று இல்லாதவர்களை அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைப்பதே ஆகும். அப்போது சென்னையில் நோய் உள்ளவர்களைக் கண்டறியவும் விரைவில் சரி செய்யவும் ஏதுவாக இருக்கும். இது என் தாழ்மையான கருத்து.
மக்களின் பொருளாதார நிலை வெற்றிடமாக மாறிய நிலையில் இங்கு யாரிடமும் கேட்க முடியாத நிலையில் அவர்கள் உயிரோடு வைத்துக்கொள்ள தங்களின் சொந்த ஊருக்கு செல்ல நினைக்கிறார்கள். அது நியாயமும் கூட. அதற்காக முறையே யோசித்து செயலாற்ற வேண்டியது தங்களின் கடமையாகும் என நினைவூட்டுகிறேன்.” இவ்வாறு சேரன் கூறியுள்ளார்.

சேரன் சொல்லுவது சரிதான். தங்களுக்கு சொந்த ஊர் செல்லுவது பாதுகாப்பு என்று கருதுகிறவர்களை, மறுத்து அடைத்து வைப்பதும், இல்லை நான் சொந்த ஊர் செல்லவில்லை இங்கேயே பாதுகாப்பாய் இருந்து கொள்கிறேன் என்று சொல்கிறவர்களை வலிந்து அனுப்ப முயற்சிப்பதும் கொரோனா பரவலை ஊக்குவிக்கிற காரணியாக அமைந்திருக்கிறது. இது உலகம் முழுமைக்கும் பொருந்தும் செய்திதான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.