Show all

நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா! இப்படி ஒரு யோசனை

நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை உயர்அறங்கூற்று மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை உயர்அறங்கூற்று மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதித்தால் என்ன? நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன? தனிநபர் வாங்கும் 2வது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் ஆகியவற்றை 2 மடங்காக உயர்த்த வேண்டும். இது குறித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நாளது 23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்றுக்குள் (06.03.2020) மார்ச் 6ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

அறங்கூற்றுமன்றத்திற்கு பதில் அளிக்கப் போகும் தமிழக அரசுக்கு ஒரு தகவல்:- உலகம் முழுவதும், மன்னர்கள் என்றாலே, அரண்மனை- அந்தப்புரம் என்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்க- நமது பழந்தமிழ் மன்னர்கள், மக்களுக்கு அவசர காலத்திற்கு உதவும் வகையாக பெரிய பெரிய கோவில்களைக் கட்டினர். 

அதே தமிழ்மண்ணில்- இருகோடுகள் தத்துவத்திற்காக- இருகோடுகள் என்று ஒரு படமே எடுத்து, ஒரு கோட்டை சிறிய கோடு ஆக்குவதற்கு, அந்தக் கோட்டை அழிக்கக் கூடாது. பக்கத்தில் பெரிய கோடு போட வேண்டும் என்று உணர்த்திய அந்தத் தத்துவத்திற்காக அந்தப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அரசு- இல்லாதவர்களுக்கு வீடு கொடுப்பது என்பது, நியாயமாக இருக்க முடியும். அது என்னது? ஒருவர் இரண்டு வீடு கட்ட தடை போடுவது? தேவை வறுமைக்குத் தீர்வு. வளமைக்கு தடை போடுவதால் வறுமைக்கு என்ன ஆதாயம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.