28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிவா நடிப்பில் இயக்குனர் அமுதன் இயக்கிய தமிழ்ப்படம் 2 இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் வந்து கொண்டிருந்தாலும் முதல் நாளில் பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையான வசூலை தந்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் அபார வசூலை பார்த்த செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் இந்த படத்தின் உரிமையை பெற முயற்சித்தன. கடும் போட்டிக்கு பின்னர் ஒரு பெரிய தொகைக்கு விஜய் தொலைக்காட்சி, இந்த படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளது. வெளியீடு ஆன முதல் நாளிலேயே செயற்கைக்கோள் உரிமை விற்பனையானதை தமிழ் திரையுலகினர் வியந்த பார்க்கின்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



