09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மரணம்! அவசர அவசரமாக செயலலிதா அவர்களுக்கு அரசியலில் உற்ற துணையாய் இருந்த சசிகலா குற்றவாளியாக சிறையில் அடைப்பு! செயலலிதா குற்றவாளிதான் என்று நடுவண் அரசுக்கு ஒரு முகமும், செயலலிதா மட்டும் குற்றவாளியில்லை என்று தமிழ் மக்களுக்கு ஒரு முகமும் காட்டி நடுவண் அரசிடம் இருந்து ஆட்சியை பிச்சையாக பெற்றவர்கள் இந்த எடப்பாடியும், பன்னீரும். தினகரன் அவர்கள், இவர்கள் உண்மையான அதிமுக அல்ல என்று தெருத்தெருவாக அலைந்து திரிந்து தமிழ் மக்களிடம் கெஞ்சி மன்றாடி வருகிறார். தினகரன் கருத்தை ஒப்புக் கொள்வதைப் போல தமிழ் மக்கள் அவருக்கு இராகிநகர் தேர்தலில் சான்றிதழ் வழங்குகிறார்கள். ஆனாலும் எடப்பாடி பன்னீர் தரப்பு தங்கள் தாம் அதிமுக என்று நடித்துக் கொண்டே வந்தார்கள்;. ஆனால் அவர்களின் எந்தச் செயலும் உண்மையான அதிமுகவாக அவர்களை அடையாளப் படுத்த வில்லை. இருந்த போதும் நேற்று வரை அவர்கள் நடிப்பு நின்ற பாடில்லை. நேற்று அவர்கள் உச்சகட்டமாக, மே மாதத்தை தமிழின அழிப்பு மாதமாக கொண்டாடிய அருவருக்க தக்க செயல் அவர்களை அம்பலப் படுத்தி விட்டது. இனி இவர்கள் நடிப்பை தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள். அடுத்த தேர்தலில் இவர்கள் வீட்டிற்கு அனுப்ப பட்டுவிட்டால் அவர்கள் வாழ்நாள் முழுக்க, மழைக்காக கூட அரசியல் பக்கம் தமிழ்மக்கள் அவர்களை அண்ட விட மாட்டார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



