09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். தொடக்கம் முதலே தப்புதப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு இந்த ஆட்சி கைப்பற்றப் பட்டிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கிற யாரையும் நம்பி தமிழ் மக்கள் ஆட்சியைத் தந்து விடவில்லை. தமிழ் மக்களுக்கு உற்ற துணையாகவும் நம்பிக்கையாகவும் இருப்பார் என்ற உறுதியில், தமிழ் மக்கள் செயலலிதா அவர்களுக்கு தரப்பட்ட ஆட்சி இந்த ஆட்சி. செயலலிதா அவர்களைக் குற்றவாளியாக்கி நடுவண் அரசு உங்களுக்கு மாற்றித் தந்திருக்கிறது இந்த ஆட்சி உரிமையை. உங்களுக்கு செயலலிதா அவர்கள் மீதும் உண்மையில்லை. செயலலிதாவிற்கே ஆட்சியைத் தந்த தமிழ்மக்கள் மீதும் உங்களுக்கு நன்றியுணர்வில்;லை. தமிழினத்தின் எதிரிகள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அறிவார்ந்த தமிழ்சமூகம் உரிமை பெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக காய்நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அவர்களில் ஒருவன் இராஜபக்ஷே. அவனுக்கு துணையாக, நீண்ட நெடுங்கால தமிழர் விரோத சக்தி ஆரியக்கூட்டம், ஆரியத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, ஆரியத்தின் மீது உடன் பாடும் இல்லாத, இராஜிவ் காந்தியை பகடைக் காயாக்கி அவரையும் அழித்து, அப்பழியை தமிழ்மக்கள் மீது சுமத்தி, ஒன்பதாண்டுகளுக்கு முந்தைய இதே மே மாதத்தில் கொத்து கொத்தாக ஒரு தமிழினக் கூட்டத்தையே அழித்து முடித்தார்கள். மே மாதம் என்ன தமிழின அழிப்பு மாதமா? இந்த மே மாதத்தில் தமிழ் மண்ணிலேயே, சூடுசொரணை இல்லாத வெட்கங் கெட்ட தமிழனாக, ஸ்டெர்லைட் முதலாளியின் கைக்கூலியாக, பாஜக ஆரியக் கூட்டம் பறித்துத் தந்த ஆட்சியை வைத்துக்கொண்டு தாய்பாலை அருந்தி வாழாத தறுதலை காவல்துறையால் சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கின்றனர் எம்தமிழ் மக்கள். களவாணித் தனமாக பெற்ற ஆட்சியில் பொறுப்பிலிருக்கிற அமைச்சர் ஜெயக்குமார், 'தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால், காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாததாகி விட்டது' என்று கூறியிருப்பது நயவஞ்சகத்தின் உச்சம் என்ற போதும், பொறுப்பற்ற பேச்சு, ஏற்புடையதல்ல, ஓரளவுக்கு ஏற்புடையது என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ள இதழுக்கு பொறுப்பற்ற பேச்சு என்று கருத்து கணிப்பில் முடிவு எழுதி, எண்பது விழுக்காட்டுப் பேர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்;. இப்போதைக்கு நீங்கள் ஆட்சியை விட்டு இறங்காமல் ஒட்டிக் கொண்டிருக்கலாம்; இருந்து விட்டுப் போங்கள் நீங்கள் ஆட்சிப் பக்கம் தலைவைத்து படுக்க முடியாமல் தமிழ் மக்களால் நீங்கள் நிரந்தரமாக நீக்கப் படுவது உறுதி உறுதி! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,796.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



