தமிழக ஆளுநரின் பச்சைமை பேனாவின் ஒற்றைக் கையெழுத்து மட்டுமே மீதமிருக்கிறது, 28ஆண்டுகால சட்டப் போராட்டம் நிறைவடைந்து ஏழுபேரின் விடுதலை. 27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜிவ்காந்தி கொலை வழக்கு- நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், முருகன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் சிறைப்படுத்தலில் முடித்துக் கொள்ளப் பட்டது 28 ஆண்டுகளுக்கு முன்பு. இராஜிவ் கொலை வழக்கு மர்மாக முடித்துக் கொள்ளப் பட்டு விட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட இந்த ஏழுபேரும் பலிகடாவாக்கப் பட்டவர்கள். இராஜிவ் கொலையில் உலகபயங்கரவாத தலையீடு இருந்திருக்கிறது. இராஜிவ் கொலையில் சட்டம் கையாளப்பட்ட போக்கிலே நின்று விவாதித்தாலும் ஏழுபேர்களின் தண்டனை காலம் முடிந்து விட்டது. இப்படி எல்லாக் கோணத்திலிருந்தும், ஏழுபேர்கள் விடுதலையில் 28ஆண்டுகால சட்டப் போராட்டம் நிறைவு பெற்றது. உச்சஅறங்கூற்று மன்றமும் இனி இந்த ஏழுபேர்கள் விடுதலையில் தடை சொல்லுவதற்கும் ஏதும் இல்லை. விடுவித்தாக வேண்டும் என்று ஆணை இடுவதற்கும் தேவை எழவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளது. வாதம் செய்வதற்கு எதுவும் இல்லை. தமிழக ஆளுநரின் பிடிவாதத்திற்கு தங்களிடம் மருந்தும் இல்லை என்பதாக மிகத் தெளிவு படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் இனி அறங்கூற்றுமன்றத்தின் பணி இருக்காது. இதில் தமிழக ஆளுநர் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் எனத் தெளிவாக தெரிவித்து விட்டது. இந்நிலையில் 28 ஆண்டு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், முதல்வர் தனிப்பட்ட முறையில் ஆளுநரை அணுகி 7 பேர் விடுதலைக்கு ஆவண செய்யவேண்டும் என இரஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,148.
ஆளுநர் பிடிவாதத்தை தளர்த்தலாம். ஆளுநரின் கூட்டாளிகள் எடப்பாடி பன்னீர் ஆளுநரை நிர்பந்திக்கலாம். ஆளுநருக்கு இந்த ஏழுபேர் விடுதலையில் மோடியின் நெருக்கடி இருந்தால் போட்டு உடைக்கலாம். அல்லது மக்கள்: 1. ஆளுநர், 2. மோடி, 3. எடப்பாடி 4. பன்னீர் இந்த நால்வரிடம் இருந்து பதவியை பிடுங்கலாம்.
இந்த நால்வர் கண்ணியமாக வழிவிட்டால், இரண்டொரு கிழமையில் இந்த ஏழுபேர்கள் விடுதலை சாத்தியமாகும். வழிவிடாவிட்டாலும். அடுத்த மாதம் சாத்தியமாகும். மக்கள் இவர்களின் பதவியை பறித்த ஆணை வாக்குப்பதிவு எந்திரத்திற்குள் தானே முடங்கியிருக்கிறது. அந்தப் பாம்பு படமெடுத்து இவர்களைப் போட்டுத்தள்ள இன்னும் பதின்மூன்றே நாட்கள் தாமே இருக்கின்றன.
இந்த ஏழுபேரை விடுதலை செய்ய ஏதுவாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் தமிழக அரசின் முடிவை எதிர்த்து இராஜீவுடன் கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார்கள் குற்றவாளிகளை விடுவிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட முடிவு மேலும் இந்த முடிவு இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கு எதிரானது என்று, குற்றவாளிகளின் தண்டனையை குறைப்பதென்பதும் குடியரசு தலைவர், ஆளுநரின் அதிகார வரம்பிற்கே உள்ளது என்றும் அதே ஆண்டே உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.