இன்று வெளியாகவிருந்த விசாலின் படமான அயோக்கியா, இன்று வெளியாகாது என்று அறிவிக்கப் பட்டு, மீண்டும் காலையில் வெளியாக வேண்டிய படம் மாலையில் வெளியீடு ஆகிறது. 27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விசால், ராசி கண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், சனா கான், யோகி பாபு, ராகுல் தாத்தா ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அயோக்யா. இது பெண்களை மையப்படுத்திய படம் என்று பேசப்பட்டு எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. இன்று உலகம் முழுவதும் வெளியாக இருந்த நிலையில், தவிர்க்க முடியாத பல காரணங்களுக்காக இப்படம் இன்று வெளியாகவில்லை என்றும், படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகி காலை, பகல் காட்சிகளுக்கு வந்த பார்வையாளர்கள் சோகத்துடன் திரும்பிச் சென்றனர். இவ்வாறான நிலையில் திடீர் திருப்பமாக விசால் ஒரு கோடி வரை தன் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டதாலும், வேறு சில உடன்பாடுகளாலும் அயோக்கியா இன்று மாலை காட்சி தொடங்க வெளியாக உள்ளதாக அண்மைச் செய்தி தெரிவிக்கிறது. இதற்கிடையில் படம் வெளியாகததற்காக பக்கம் பக்கமாக கோவித்துக் கொண்டவர்கள் முகத்தை தொங்கப் போட்டு நிற்பது விசாலுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,148.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.