இளைஞர்கள் நலவிழாவைத் தொடக்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர், முப்பது ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டாராம்; அதிகாரத்தை பயன்படுத்தி புகையிலைக்கான தடையை கொண்டு வருவார் என்று பார்த்தால், ஏதோ எளிய மனிதர்கள் போல தனது அனுபவத்தை பகிர்கிறாரே. 14,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அடையாறு புற்றுநோய் மையம் சார்பில், இளைஞர்கள் நல விழா என்ற, மூன்று நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று தொடங்கியது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். எளிய மனிதர்கள், தாங்கள் இன்ன காரணத்தால் புகைப்பழக்கத்தை விட்டு விட்டதாகவும், எளிய மனிதர்கள், தாங்கள் இன்ன காரணத்தால் குடிப்பழக்கத்தை விட்டு விட்டதாகவும், கொண்டாடுவது இயல்பு. ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பவர், தமிழகத்தில் இனி புகைப் பொருள்கள் விற்காது! தமிழகத்தில் இனி டாஸ்மாக் கிடையாது! என்று ஏதாவது அரிதான செய்தியைச் சொல்லி இந்தத் தொடக்க விழாவில் தனது தொடக்கத்தை அசத்தப் போகிறார் என்ற நினைத்தால்- ‘இந்தியாவில், இதயம், புற்றுநோய் உள்ளிட்ட, தொற்றா நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவற்றிற்கு, புகையிலை பொருட்களை பயன்படுத்துவதே முதன்மைக் காரணம். தொற்றா நோயால் ஏற்படும் இறப்புகளுக்கு, புகையிலை பழக்கம் தான் முதன்மைக் காரணம். நான், புகையிலை பழக்கத்தை, 30 ஆண்டுகளுக்கு முன், விட்டு விட்டேன்’ என, தமிழக ஆளுநர், பன்வாரிலால் புரோகித் பேசுகிறார். ஏழுபேர்கள் விடுதலை குறித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உங்களுக்கு அனுப்பியும் கண்டு கொள்ளாமல் நாளைக் கடத்துகிறீர்கள்; நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் புகைப் பழக்கத்தைத் தொடர்ந்தால் கூட நாங்கள் என்ன செய்ய முடியும். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர், சாந்தா பேசுகையில் இந்தியாவில், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் அதிகமாக பரவி வருகின்றன. எந்த நோயாக இருந்தாலும், வருவதற்கு முன், தடுக்கப்பட வேண்டும். சின்னம்மை, காலரா, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள், பல்வேறு நாடுகளில், முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன. புகையிலை பழக்கத்தை கைவிடுவதன் வாயிலாக, 40 விழுக்காடு புற்றுநோயை குறைக்க முடியும் என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,198.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



