22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் முதன்மையான பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு கல்வியாளர்கள் தரப்பில் அதிருப்தியும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தின் முதன்மையான கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமிக்க பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவிலிருந்து தண்ணீர் தடையில்லாமல் கிடைக்க காவிரி மேலாண்மை வாரியம் கோட்டால், தமிழனுக்கு பாடம் கற்பிக்க ஆசிரியரை அனுப்புகிறது பாஜக. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,748.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



