Show all

செங்கோட்டையன் அதிரடி! திங்கட் கிழமை தொடங்கவிருப்பது இயங்கலை வகுப்பு அல்ல. தொலைக்காட்சி மூலமாக பாடம். வரவேற்கிறோம்

தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போவது மிகப் பெரிய அறைகூவலாயிற்றே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணையக்கல்விக்கு ஒப்படைக்கலாமே, என்று நாம் யோசனை வெளியிட்ட சில மணித்துளிகளில், அரசுக்குள்ளும் இந்த மாற்றம் ஏற்பட்டு இந்த செய்தி வெளியாகி இருப்பதை வரவேற்கிறோம்.

25,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: வருகிற திங்கட் கிழமை தொடங்க விருப்பதாக அறிவித்த- அரசு பள்ளி மாணவர்களுக்கான இணைய வழிக் கல்வி- அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இயங்கலை மூலம் வகுப்பு நடத்தப்படாது. தொலைக்காட்சி  மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: தமிழகத்தில் இயங்கலை மூலம் வகுப்பு நடத்தப்படாது; தொலைக்காட்சி மூலமாகத்தான் பாடம் கற்பிக்கப்படும் என்பதாகும்.

முன்னதாக அரசு பள்ளிகளில் வரும் திங்கட் கிழமை முதல் இயங்கலைக் கல்வி முறை தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இன்று இந்த அதிரடி மாற்று விளக்கத்தை அளித்துள்ளார். 

தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, இயங்கலை வகுப்பு தொடங்கப் போவது மிகப் பெரிய அறைகூவலாயிற்றே. இந்த முயற்சிக்கு மாற்றாக, வெட்டியாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிற பொதிகைத் தொலைக்காட்சியை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இணையக்கல்விக்கு ஒப்படைக்கலாமே, என்று நாம் யோசனை வெளியிட்ட சில மணித்துளிகளில், அரசுக்குள்ளும் இந்த மாற்றம் ஏற்பட்டு இந்த செய்தி வெளியாகி இருப்பதை வரவேற்கிறோம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.