கோயம்புத்தூரில் சேர்ந்த தங்க நகை பொற்கொல்லர் ஒருவர் தங்கத்திலான, வெள்ளியிலான கொரோனா பாதுகாப்பு முகமூடி செய்து அசத்தியுள்ளார். 05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கோயம்புத்தூர் புறநகரில் இருக்கும் தொப்பம்ப்ட்டியைச் சேர்ந்தவர். தங்க நகை பொற்கொல்லர். இவர் தங்கத்திலான, வெள்ளியிலான கொரோனா பாதுகாப்பு முகமூடி செய்து அசத்தியுள்ளார். தங்க முகமூடியை ரூ. 275000 மதிப்பில், 46.5 கிராம் அளவிலான 18மாற்று தங்கத்தைப் பயன்படுத்தி செய்துள்ளார். இதேபோல், 40 கிராம் வெள்ளியை பயன்படுத்தி வெள்ளி முகமூடியும் செய்துள்ளார். இதன் மதிப்பு ரூ. 15,000. உலகம் முழுவதும் கொரோனாவோடு பாதுகாப்பாக வாழவேண்டிய இந்தச் சூழலில் தங்கத்தில் முகமூடி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், அதன் முதன்;மைத்துவத்தை உணர்த்த வேண்டும் என்ற தங்கம் மற்றும் வெள்ளியினால் இரண்டு முகமூடிகளைச் செய்தேன். இன்று முகமூடியும், மனிதர்களும் பிரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்கிறார் அந்தப் பொற்கொல்லர். தங்கத்தில் முகமூடி செய்ய ஏழு நாட்களும், வெள்ளியில் முகமூடி செய்ய ஆறு நாட்களும் பிடித்தன. நான் இந்த முகமூடிகள் செய்வதைப் பார்த்து எனக்கு கேட்புகளும் வந்துள்ளன. 5 தங்க நகைக் கடைக்காரர்களிடம் இருந்து 9 கேட்புகளும், மற்றும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சண்டிகர், புதுடெல்லி ஆகிய இடங்களில் இருந்தும் கேட்புகள் வந்துள்ளன. மூன்று தொழிலதிபர்கள் வெள்ளி முகமூடி செய்ய ஒப்புகை கொடுத்துள்ளனர். விலைகளில் சிறிது விட்டுக் கொடுத்து தொழில் செய்கிறேன் என்றார். இவரது பெயர் ஏற்கனவே இந்தியச் சாதனைப் புத்தகத்தில் ஏற்கெனவே பதிவாகி இருக்கிறது. ஐந்து அகவை பெண் குழந்தைக்கு வெறும் 5.3 கிராமில் ஒட்டியாணம் செய்து அசத்தி இருந்தார். இதற்காக இந்தப் பொற்கொல்லர் கௌரவிக்கப்பட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



