இந்திய மோட்டார் வாகன சட்டப்படி நீங்கள் உங்களது காரில் செல்லும் போது வழியில் யாரேனும் லிப்ட் கேட்டு நீங்கள் உதவி செய்து விட்டால் உங்களுக்கு சனி உச்சத்தில் இருக்கிறான் என்று பொருள். ஏனென்றால் மோட்டார் வாகன சட்டப்படி 66/ 192 பிரிவின் கீழ் முன் பின் தெரியாதவர்களுக்கு லிப்ட் கொடுப்பது இந்திய சட்டப்படி குற்றமாகும் . உங்களிடமிருந்து ஓட்டுநர் அடையாள அட்டை உடனடியாக போக்குவரத்து காவல் துறை பறித்து அதனை நீதிமன்றத்திடம் அனுப்பி வைத்து விடுவார்கள் பிறகு நீங்கள் 2000 லிருந்து 5000 ரூபாய் வரையிலான அபராத தொகையை கட்டினால் மட்டுமே உங்கள் ஓட்டுநர் அடையாள அட்டை திரும்ப கிடைக்கும் . இப்படித்தான் நிதின் நாயர் என்ற நபர் மும்பையில் உள்ள காந்தி நகர் வழியாக தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது அடை மழையில் லிப்ட் கேட்டுக்கொண்டிருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கும் , இளைஞனர்களுக்கும் உதவி செய்யும் மனப்பான்மையில் லிப்ட் கொடுத்துள்ளார் இதனை அருகில் இருந்த போக்குவரத்து காவல் துறை அதிகாரி காரை மறித்து நிதின் நாயரின் ஓட்டுநர் அடையாள அட்டையை பிடிங்கி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்துவிட்டார் பிறகு நிதின் நாயர் நீதி மன்றத்தில் தனது தவறுக்காக மன்னிப்பும் ,2௦௦௦ ஆயிரம் ரூபாய் பைன் கட்டிய பின்னரே அவருக்கு ஓட்டுநர் அடையாள அட்டை திரும்ப கிடைத்தது இந்த வித்யாசமான சட்டத்திற்கு பலியான நிதின் நாயர் தனது மனக்குமுறல்கள் மற்றும் அபராத சீட்டினை விழிப்புணர்வு ஏற்படுத்த பேஷ்புக்கில் ஜூன் 22 ஆம் தேதி வெளியிட்டார் . உதவி செய்ததற்கெல்லாம் அபாரதம்மா இப்படி சட்டம் இருந்தால் இனி எப்படி மற்றவர்கள் உதவி செய்வார்கள் என பலர் கேள்வியெழுப்பி இந்த பேஷபூக் பதிவினை இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஷேர் செய்து வைரலாக்கியுள்ளனர். அவருடைய அபராத சீட்டு இந்த பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு இந்த பயனுள்ள தகவலை பகிர்ந்துகொள்ளுங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் !
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



