Show all

ஒரு நாள் இரவு சுடுகாட்டில் தூங்கி நிருபித்த சட்டமன்ற உறுப்பினர்!தொழிலாளர், 'சுடுகாட்டில் பேய்' பயம் போக்க

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி  சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு  சுடுகாட்டை நவீனமயப்படுத்துவதற்காக, கழிவறைகள் மற்றும் ஒரு பூங்கா போன்ற வசதிகளை செய்ய முயற்சித்தார் ஆனால் தொழிலாளர்களின் பேய் பயத்தால் அந்த பணிகளை நிறைவேற்ற முடியாமல் தடைப்பட்டு இருந்தன.

நான் சுடுகாட்டிலேயே படுத்துக் தூங்குகிறேன் பேய் என்னை என்ன செய்கிறது என்று பார்க்கலாம் என்று இவர் கடந்த வெள்ளிக்கிழமை அந்த சுடுகாட்டில் படுத்து தூங்கியுள்ளார். 

சனிக்கிழமை, நாயுடு அவர்கள் இன்னும் சில இரவுகளைக் கழித்திருப்பதாகவும் உறுதி அளித்தார்.

நிம்மல ராம நாயுடுவின் இந்தச் செயலை  கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டி உள்ளார்.

ராம நாயுடுவின் முயற்சிகள்.. ஒரு உள்ளூர் விவகாரம் அல்ல  அற்பமான சடங்குகள் மற்றும் பரவலான மூடநம்பிக்கைக்கு   எதிரான அவரது போராட்டம். தேசிய கவனத்தை ஈர்க்க வேண்டும் என கூறி உள்ளார்

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,829.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.