11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு சட்டமன்றஉறுப்பினர்கள் 18 பேர் நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்றை அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கொடுத்தனர். இதையடுத்து அந்த 18 பேரையும் பேரவைத் தலைவர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த இரு நாட்களுக்கு முன்பு அளிக்கப்பட்டது. இந்திரா பானர்ஜி பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானது. அவரது முடிவில் அறங்கூற்றுமன்றம் தலையிட முடியாது என்றார். அறங்கூற்றுவர் சுந்தர் கூறுகையில், பேரவைத் தலைவர் எடுத்த முடிவு தவறானது என்று தீர்ப்பளித்தார். இரு நபர்கள் கொண்ட அமர்வில் இரு அறங்கூற்றுவர்களும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் 3-ஆவது அறங்கூற்றுவராக விமலாவை மூத்த அறங்கூற்றுவர் குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்றஉறுப்பினர்களில் தங்க தமிழ்ச்செல்வன் தவிர்த்து 17 சட்டமன்றஉறுப்பினர்கள் சார்பில் நேற்று உச்சஅறங்கூற்றுமன்றத்தில் புதிதாக ஒரு மனு பதிகை செய்யப்பட்டுள்ளது. அதில் சட்டமன்றஉறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச அறங்கூற்றுமன்றத்திற்கு மாற்ற கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் இந்த வழக்கு விசாரணை மேற்கொண்டால் உரிய நியாயம் கிடைக்காது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தகுதி நீக்க வழக்கை உச்சஅறங்கூற்றுமன்றத்திற்கு மாற்ற கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. 17 பேரின் கோரிக்கையை ஏற்று அவசர வழக்காக நாளை மறுநாள் விசாரிக்க உச்ச அறங்டுகூற்றுமன்றம் ஒப்புதல் அளித்து உள்ளது. தீர்ப்பு எதுவானாலும் அதிமுக அரசு கவிழ்வது உறுதி. அப்படி இப்படியென்று நாடளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடக்கும். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,829.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



