இந்திய அணு மின்சாரக் கழக கணினிகள் மீது ‘சுழியம்’ தாக்குதல் நடந்துள்ளது உண்மைதான் என்று இந்திய அணு மின்சாரக் கழகம் தெரிவித்துள்ளது. 13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இந்த இரண்டு அணு உலைகளில் 1,000 மெகாவாட், 600 மெகாவாட் என மொத்தம் 1,600 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள உலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகளில் வடகொரியாவைச் சேர்ந்த ‘லாசரசு’ எனும் குழுவால் ஊடுருவல் செய்யப்பட்டு, ‘டி ட்ராக்’ என்ற வைரஸ் மூலம் அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டதாக கீச்சுவில் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் இந்தப் பதிவை அடுத்து சமூக வலைதளங்களில்- அணுமின் நிலையத்தில் உள்ள கணினிகளில் வைரஸ் குறித்து பீதி கிளம்பி பெரும் பரபரப்பை உண்டாக்கியது. ஆனால் கீச்சுப் பயனர் வெளியிட்ட இந்தத் தகவலை, கூடங்குளம் அணுஉலை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது. மேலும் இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையிலும், அணு உலையில் சுழியம் தாக்குதல் நடைபெற்றதாக பரவி வரும் செய்திகள் பொய்யானது. மேலும் அணு உலைகளில் செயல்படும் கட்டுப்பாடுகள் அனைத்தும் தனித்துவமானது. அப்படி இருக்கையில் வெளியில் இருந்து யாராலும் ஊடுருவல் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்திருந்தது. இது தொடர்பாக மும்பையில் உள்ள இந்திய அணு மின்சாரக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்திய அணு மின்சாரக் கழக கணினிகளில் ‘மால்வேர்’ கண்டுபிடிக்கப்பட்டது உண்மைதான். கடந்த 18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (04.09.2019) அன்று இந்தியக் கணினி அவசரப் பொறுப்புக் கழகம் இதனைக் கண்டறிந்தவுடன் எங்களுக்குத் தெரிவித்தனர். பின்னர் அணுசக்தித் துறை நிபுணர்கள் உடனே ஆய்வு செய்தனர். மேலும் அந்தக் கணினி, அணு உலை தொடர்பான வலையமைப்பில் தொடர்பில்லாதது என்றும், கூடங்குளம் அணுமின் நிலைய கணினி இணையம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்திய அணு மின்சாரக் கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் அணு உலையின் பெயர் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,321.
ஆனாலும் பலரும் இதனை நம்பாமல் மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பிவந்தனர். இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வைரஸ் தாக்குதல் நடைபெற்றது உண்மைதான் என தெரியவந்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.