சில மருத்துவக் கனவாளர்கள், “நீட்” மூலமாக பறிபோன மருத்துவக் கல்வி இடங்களையும், மருத்துவர் பணியாற்றுவதற்குரிய வேலைகளையும் “ஆள்மாறாட்டம்” என்கிற எதிர் களவுமுறை மூலமாக திருட முயன்று நாம் சொல்லப் போகிற கதையின் நரி போல, கதை முடிந்து போகத் தொடங்கி விட்டார்கள். அதுவும் தனித் தனியாக அல்ல; குடும்பம் குடும்பமாக. நீட் எதிர்ப்பு போய், ஆள்மாறாட்டம் வந்தது டும் டும் டும்! 12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தமிழகத்திற்கு பொருந்தவே பொருந்தாது. ஏனென்றல் பனிரெண்டாம் வகுப்பு தேறிய மாணவர்களின் பொறியியல் கனவுக்கு 80லிருந்து 90 விழுக்காடு அளவுக்கு நிறைவேற்றுவதற்கு பொறியியல் கல்லூரிகளைக் கொண்டிருக்கிறது தமிழகம். அதே போல பனிரெண்டாம் வகுப்பு தேறிய மாணவர்களின் மருத்துவர் கனவுக்கு 60லிருந்து 90 விழுக்காடு அளவுக்கு நிறைவேற்றுவதற்கு மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ மனைகளையும் தமிழகத்தில் இது வரை ஆண்ட அரசுகள் உருவாக்கி வைத்திருக்கின்றன. தமிழகம் விடுத்து இந்தியா முழுவதும் மாணவர்களின் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்விக் கனவுக்கு இவ்வாறான தமிழகம் போன்ற அமைப்பு முறை கிடையாது. பாஜக அரசு இதற்கான தீர்வாக இந்தியா முழுவதும் தமிழகம் போன்று, வட இந்திய மாணவர்களின் பொறியியல் மற்றும் மருத்துவக் கனவுகளின் நிறைவேற்றத்திற்கு உரிய கட்டுமானங்களை உருவாக்கமால், தமிழக மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை இந்திய முழுவதும் பகிர்ந்து கொள்வதற்கு குறுக்கு வழியாக (பாஜக அரசு) கண்டு பிடித்த யுக்திதான் நீட் தேர்வு. நீட் தேர்வால் வடமாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து வஞ்சகமாக திருடிய மருத்துவக் கல்வி இடங்களும், மருத்துவர் பணியாற்றுவதற்கு வேலைகளும் கிடைக்கின்றன. ஆனால் தமிழகத்திற்கு தமிழகம் பயன்படுத்தி வந்த மருத்துவக் கல்வி இடங்களும், மருத்துவர் பணியாற்றுவதற்கு வேலைகளும் பறிபோகின்றன. இதற்கு தமிழகம் முன்னெடுத்த தீர்வு நீட் எதிர்ப்பு! நியாயத் தீர்ப்புசொல்ல வேண்டிய அமைப்புகளும், தமிழகத்தில் நாம் தேர்ந்தெடுத்த தலைவியின் இறப்புக்குப் பின், பதவியேற்றிருக்கும் பொறுப்பற்ற அரசும் அந்தத் திருட்டை அங்கிகரித்த நிலையில்: சில மருத்துவக் கனவாளர்கள், “நீட்” மூலமாக பறிபோன மருத்துவக் கல்வி இடங்களையும், மருத்துவர் பணியாற்றுவதற்குரிய வேலைகளையும் “ஆள்மாறாட்டம்” என்கிற எதிர் களவுமுறை மூலமாக திருட முயன்று நாம் சொல்லப் போகிற கதையின் நரி போல, கதை முடிந்து போகத் தொடங்கி விட்டார்கள். அதுவும் தனித் தனியாக அல்ல; குடும்பம் குடும்பமாக. ஆம். வாலு போயி கத்தி வந்துச்சு, டும் டும் டும்! ரொம்ப நாளைக்கு முன்னாலே ஒரு நரிக் கூட்டம் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. நரிக் கூட்டத்தின் மூத்த நரி நாம் ஏன் காடு காடாக சென்று வேட்டையாடி பிழைத்து பாவத்தை சம்பாதிக்க வேண்டும்? நமக்குதான் சொந்தமாக ஆறு எல்லாம் இருக்கிறதே? என்று கேள்வி எழுப்ப, நரிக்கூட்டம் ஒரு வெள்ளரிக்கா தோட்டம் போடலாம்னு முடிவு பண்ணிச்சுங்க. நரிகள் எல்லாமா சேர்ந்து ஒரு இடத்தை தேர்வு செஞ்சு வெள்ளரிவிதை கொண்டு வந்து போட்டு தோட்டம் அமைச்சுதுங்க! ஆற்றுப் பாசனத் தோட்டத்துல போட்ட செடிகள் நல்லா வளந்து காயா காச்சுதாம். இந்த நிலையில்தான் ஊரைச் சுற்றியே இரை தேடி உண்டு வந்த காக்கைக் கூட்டத்திற்கு எங்கும் உணவு கிடைக்காத நிலையில், அந்தக் காக்கா கூட்டம் இந்த நரிக்கூட்டத்தில் தஞ்சம் கோரியது. நரிக் கூட்டமும் காக்கைக் கூட்டத்திற்கு தஞ்சம் அளித்தது. நரிக்கூட்டம் கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே இலவசமாக தொடக்க காலத்தில் வெள்ளரிப் பழம் தருவோம். பிறகு நீங்களே வெள்ளரிக்காய் பயிரிட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டன. சோம்பேறி காக்கைக் கூட்டம் வேறுவகையாக திட்டம் போட்டன. நாம் பறந்து சென்று நரிகளின் தோட்டத்து வெள்ளரிக்காய்களை திருடி தின்போம். அது நமக்கு மட்டுமே பயன்படுகிற வகையில். தோட்டம் முழுவதும் கருவேல முட்களைப் பரப்பி விடுவோம். என்று முடிவு செய்து வெள்ளரிக்கா தோட்டம் முழுவதும் கருவேல முட்களைப் பரப்பி விட்டன. காக்கை கூட்டம் பரப்பி வைத்திருந்த ‘நீட்’ட கருவேலமுள் நரியின் வாலுல குத்தியிருச்சு. வாலுல குத்தின முள்ளை அதாலே எடுக்க முடியலை! முள்ளை யாராவது எடுக்க சொல்லலாம்னா எப்படி குத்துச்சு கேப்பாங்க! அப்ப தன்னோட எதிர் களவானித் தனத்தை சொல்லனுமே எனவே மானத்துக்கு பயந்து அப்படியே விட்டுருச்சு! அந்த முள்ளு அப்படியே தங்கி சீழ் கோத்துக்கிச்சு. நரியாலே வலி தாங்க முடியலை! அந்த வலியோடவே அப்படியே பக்கத்து கிராமத்துக்கு போச்சு! அங்க ஒரு நாவிதர் இருந்தார். அவர் மருத்துவமும் செய்வாரு. அவர்கிட்ட போயி “அய்யா நாவிதரே! என்னோட வாலுல முள்ளு ஒண்ணு குத்தி சீழ் பிடிச்சுருச்சு! கொஞ்சம் எடுத்து விடறீங்களா”ன்னு கேட்டுச்சு. அவரும் இரக்கப்பட்டு சம்மதிச்சாரு. தங்கிட்ட இருந்த கத்தியாலே முள்ளு குத்தியிருந்த இடத்திலே லேசா கீறி எடுக்கப்பார்த்தாரு. கத்தியை அப்பத்தான் சானை பிடிச்சு வச்சிருந்தாரு. நல்லா கூர்மையா இருக்கவும் நரியோட வாலு சீழ் பிடிச்சி அழுகி இருக்கவும் கத்தியை வச்சதுமே வாலு துண்டா அறுந்து போயிருச்சு. நரிக்கு கோபமான கோபம்! ‘ஐயா நாவிதரே! என்னோட வால்தான் எனக்கு அழகு! அதையே துண்டு பண்ணிட்டீரே! என்னோட வாலை மறுபடியும் ஒட்டவைங்க!’ன்னு கேட்டுச்சு. அது முடியாத காரியம்னு நாவிதர் சொல்ல நரி சொல்லுச்சு, ஒண்ணு வாலை ஒட்ட வை! இல்லே உன் கத்தியைக் கொடு! அப்படின்னு கேட்டுச்சு. அறுந்த வாலை ஒட்ட வைக்க முடியாது அதனால கத்திபோனா வேற கத்தி வாங்கிக்கலாம்னு அந்த நாவிதர், ‘நரியே என்னால வாலை ஒட்ட வைக்க முடியாது அதுக்கு பதிலா கத்தியை கொடுக்கிறேன்! எடுத்துக்கோ!’னு கத்தியை கொடுத்தாரு. மொட்ட வாலோட நரி கத்தியை வாங்கிட்டு அப்படியே நடந்து வந்துச்சு வழியில ஒரு ஆளு பனை மரம் ஏறி பனம்பழம் பறிச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தானாம். நரி அவன் கிட்ட வந்து ஏம்பா இந்த கத்தியாலே பழத்தை அரிஞ்சி சாப்பிடுன்னு கொடுத்தது. அவன் அந்த கத்தியாலே பனம்பழத்தை அரியும்போது கத்தி உடைஞ்சு போச்சு! அவ்வளவுதான் நரி மரியாதையா கத்தியை கொடு இல்லே பனம்பழம் கொடுன்னு கேக்க ஆரம்பிச்சுருச்சு! அவனும் பனம்பழம் ஒண்ணை கொடுத்து அனுப்பிட்டானாம். இப்ப நரி பனம்பழத்தோட அங்கிருந்து கிளம்பிச்சு. வழியிலே ஒரு எண்ணெய் வியாபாரி எண்ணெய் வியாபாரம் செஞ்சுகிட்டு வந்தானாம். அவன நரி பாத்துச்சு. “இப்படி அலைஞ்சு திரிஞ்சு வியாபாரம் பண்றீங்களே! இந்தாங்க பனம்பழம்! இதை சாப்பிட்டு தெம்பா வியாபாரம் பண்ணுங்க!ன்னு சொல்லுச்சு. வியாபாரிக்கு பனம்பழம்னா உசுரு! அதனால மகிழ்ச்சியா வாங்கி தின்னுட்டாரு! இப்ப நரி பழைய பல்லவியை ஆரம்பிச்சுது! வியாபாரியே! என்னோட பனம்பழத்தை முழுசா தின்னிட்டியே! என் பனம்பழத்தை கொடு இல்லேன்னா எண்ணெயை கொடுன்னு கேட்டுது. அவரும் பழத்துக்கு பதிலா ஒரு பாட்டில்ல எண்ணெய் ஊத்தி கொடுத்தாரு. அதை எடுத்துக்கிட்டு வந்த நரி ஒரு கிராமத்துல நுழைஞ்சுது. அங்க ஒரு பாட்டி தோசை சுட்டுக்கிட்டு இருந்தாங்க. அவங்க கிட்ட போயி நரி, ‘பாட்டி பாட்டி! நீ எண்ணெய் ஊத்தி தோசை சுடறியா இல்லே தண்ணி ஊத்தி சுடறியான்னு கேட்டுச்சு!’ ‘நரியே! நானோ பரம ஏழை! நான் எண்ணெய்க்கு எங்கே போவேன்? தண்ணி ஊத்திதான் சுடறேன்னு சொன்னாங்க பாட்டி. ‘அப்படியா இந்தாங்க இந்த எண்ணெயிலே தோசை சுட்டுக்கங்கன்னு சொல்லுச்சு நரி. பாட்டி எண்ணெயை வாங்கி தோசை சுட்டு முடிக்கிற வரை சும்மா இருந்த நரி அப்புறமா தன் வேலையை காட்டுச்சு. பாட்டி! என்னோட எண்ணையை கொடு இல்லேன்னா உன்னோட தோசையைக் கொடுன்னு கேட்டுச்சு! பாட்டியாலே மீள முடியலை! இந்த நரிக்கிட்ட ஏமாந்துவிட்டோமேன்னு எல்லா தோசையும் கொடுத்துட்டாங்க! அதை எடுத்துக்கிட்டு போச்சு நரி. வழியிலே ஒருத்தர் கொட்டு மேளம் அடிச்சுக்கிட்டு இருந்தாரு. அவருகிட்ட போச்சு நரி. அய்யா ரொம்ப பசியா இருக்கீங்களே இந்த தோசையை சாப்பிட்டு மேளத்தை அடிங்கன்னு சொல்லுச்சு. அவரும் தோசைங்களை வாங்கி சாப்பிட்டாரு. அவரு சாப்பிட்டு முடிச்சதும் நரி வழக்கம் போலவே ஏம்பா! என் தோசைங்களை கொடு! இல்லேன்னா மேளத்தை கொடுன்னு கேட்டுது. அவராலே தோசைங்களை எப்படி கொடுக்க முடியும்? கொட்டு மேளத்தை கழட்டி கொடுத்தாரு. அதை வாங்கிட்டு அப்படியே ஒரு மலை உச்சுக்கு வந்து கொட்ட தட்டிப் பார்த்தது. டும் டும்னு சத்தம் வரவும் மகிழ்ச்சி அதிகம் ஆயிருச்சு. மலை உச்சியிலே உக்காந்து டும் டும்டும்னு தட்டிக்கிட்டே அது பாட ஆரம்பிச்சுது -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,290.
நரிக்கூட்டம் கூடி இந்த வெள்ளரிக்கா தோட்டம் போனால் போகட்டும் நாம் வேறு வகையான பழங்களை விளைவிக்க தோட்டங்களைப் போடுவோம் என்று முடிவு செய்தன. ஆனால் சில நரிகளுக்கு கடுமையான கோபம். அதிலிருந்து ஒரு நரி, நம்மிடம் இருந்து திருடிய வெள்ளரிக்கா தோட்டத்திலே நாமும் திருடுவோம் என்று யாருக்கும் தெரியாமல் கமுக்கமாக வெள்ளரிக்கா தோட்டத்திற்குள் சென்றது.
வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்
கத்திப்போச்சு பனம்பழம் வந்தது டும் டும் டும்
பனம்பழம் போச்சு எண்ணெய் வந்தது டும் டும் டும்
எண்ணெய் போச்சு தோசை வந்தது டும் டும் டும்
தோசை போச்சு கொட்டு வந்தது டும் டும் டும்
இப்படி மகிழ்ச்சியா கொட்டை மாத்தி மாத்தி அடிச்சுது.
கொஞ்சம் பலமா அடிக்கவும் கொட்டு கிழிஞ்சி போச்சு! அதோட நரியோட கதையும் முடிஞ்சி போச்சு!
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



