உச்ச அறங்கூற்று மன்றத்திற்கு சென்று மதுக்கடைகளைத் திறந்தால், மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டியதுதான் அதிமுக என்கிறார் இரஜினிகாந்த். 27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: மக்கள் ஊரடங்கிற்கு கொடுத்த விலையே மிகமிக அதிகம். அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக்குக்கும் தமிழக மக்கள் தலைகொடுக்க வேண்டும் என்று செயல்படுவது மாபெரும்கொடுமை. கொரோனா நெருக்கடி நேரத்தில் டாஸ்மாக்கை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்துவிட வேண்டும் என ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து வேறு நல்ல வழியைப் பாருங்கள் என மிகவும் காட்டமான கருத்தை தெரிவித்துள்ளார் இரஜினிகாந்த். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சஅறங்கூற்றுமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளமையைக் தமிழகத்தில் எண்பது விழுக்காட்டு மக்களும், அனைத்து எதிர்க்கட்சிகளும், ஏன் குடியர்களும் கூட கடுமையாகக் கண்டிக்கின்றார்கள். இரஜினிகாந்த் ஒரு படி மேலே சென்று, நடப்பு அதிமுக அரசு டாஸ்மாக் திறக்கப் போராடுமேயானல், மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கலாம் என்கிற கனவை மறந்து விட வேண்டும் என்று தெளிவு படுத்தியிருக்கிறார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



