சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு 3,500 வடமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் திரண்டனர். அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாதது அறிந்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். 27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு 3,500 வடமாநில தொழிலாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு தொடர்வண்டி இயக்கப்படுவதாகவும், அது திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் என்றும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையறிந்து வடமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் தொடர்வண்டி நிலையம் முன்பு திரண்டனர். அதற்கான ஏற்பாடுகள் எதுவும் இல்லாதது அறிந்து, தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர், ரெயில்வே அதிகாரிகள் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அனுப்பி வைத்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டி நிலையம் முன்பு குவிந்தனர். அவர்களை காவல்துறையினர் சமாதானப்படுத்தி அருகே உள்ள பள்ளிக்கு அழைத்து சென்று வரிசையாக நிற்க வைத்து அவர்களின் பெயர், சொந்த ஊர், முகவரி உள்ளிட்டவற்றை வாங்கி கொண்டனர். உங்களை அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அது வரை பொறுத்து இருங்கள் என கூறி அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



