Show all

ஐந்து கப்பல்கள் தவிப்பு! தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டதால்

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் துறைமுகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் தூத்துக்குடி போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையின் அத்து மீறல் வெளிச்சத்திற்கு வராமல் இருக்க, மாநில உள்துறை உத்தரவை அடுத்து தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை 5 நாட்களுக்கு முடக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதனால் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளங்கள் செயல்படவில்லை. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை பதிவு செய்யமுடியாமல் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியில் இணையதள சேவை முடக்கப்பட்டதால் துறைமுகத்திற்கு கப்பல்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 5 சரக்கு கப்பல்கள் துறைமுகம் வரமுடியாமல் திணறியுள்ளன.

இதனால் தூத்துக்குடி துரைமுகத்தில் இருந்து நேற்று ஒரு நாளில் மட்டும் 5200 சரக்கு பெட்டகங்களை ஏற்றுமதி இறக்குமதிக்காக கையாளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை, கொச்சி வழியாக சரக்கு பெட்டகங்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.