குமரி மாவட்டத்தில் புதிய வாகன சட்டத்தில் வாலிபருக்கு ரூ.11,500 அபராதம் விதித்து குழித்துறை அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தலைக்கவசம் அணியாதவர்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் ரூ.100 அபராதம் விதித்து வந்தனர். இந்த நிலையில் இந்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தத்தை பாஜக கொடை எடப்பாடி அரசு, தமிழ்நாட்டில் அமல் படுத்த ஒப்புக்கொண்ட நிலையில், கடுமையான அபராதங்கள் சட்ட திருத்தம் தமிழகத்திலும் அமலுக்கு வந்தது. நேற்று குமரி மேற்கு மாவட்டம் நித்திரவிளை சந்திப்பில், சின்னத்துறையை சேர்ந்த 27அகவை வாலிபர் கிசான்ஜாண் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் மீது- தலைக்கவசம் அணியவில்லை, எண்பலகை விதிமுறைப்படி பொருத்தப் பட்டிருக்கவில்லை, மது போதையிலும் இருந்தார். என்பதாக நித்திரவிளை காவல்துறையினர் புதிய வாகன சட்டப்படி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் குழித்துறை குற்றவியல் 2-வது அறங்கூற்றுமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மோட்டார் வாகன புதிய சட்டத்திருத்த விதிப்படி தலைக்கவசம் அணியாததற்கு ரூ.1000, போதையில் வாகனம் ஓட்டியதற்கு ரூ.10 ஆயிரம், எண்பலகை விதிமுறைப்படி பொருத்தப் பட்டிருக்கவில்லை, என்பதற்கு ரூ.500 என மொத்தம் ரூ.11,500 அபராதம் விதிக்கப்பட்டது. நாகர்கோவில் துணைப்பிரிவு எல்லைக்குட்பட்ட பகுதியில் மட்டும் தலைகவசம் அணியாத வகைக்காக 92 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுபோல தக்கலை துணைப்பிரிவு பகுதியில் 166 பேர் மீதும், குளச்சல் துணைப்பிரிவு பகுதியில் 149 பேர் மீதும், கன்னியாகுமரி பகுதியில் 174 பேர் மீதும் என மொத்தம் 581 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைக்கவசம் அணியாத வகைக்காக ரூபாய் ஐந்து இலட்சத்து எண்பத்தி ஓராயிரம் வசூலிக்கப் பட்டுள்ளது என்று தெரிய வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,268.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



