10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன் வீட்டில் ஒரு முறை சுவரில் மாட்டியிருந்த படம் ஒன்று கீழே விழுந்து, படத்தின் சட்டம் கழண்டு போய் தன் காலுக்கு பக்கம் வந்து விழுந்த போது அப்படியே கிடு நடுங்கிப் போய்விட்டாராம்! சட்டம் என்றால் அவருக்கு அவ்வளவு பயமாம். சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட தூத்துக்குடிக்கு ஏன் இதுவரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செல்லவில்லை? ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முதலில் சட்டத்தை மதிக்கவேண்டும். தூத்துக்குடியில் 144 தடைச்சட்டம் அமலில் உள்ளது. 144 தடைச்சட்டம் அமலில் உள்ள நிலையில் ஸ்டாலின் மக்களை நேரில் சந்தித்திருக்கிறார். 144 தடை அமலில் உள்ள போது அங்கு கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



