10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மின்வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறி, தூத்துக்குடியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் நிலையில் இன்று காலை 5.15 மணி முதல் ஸ்டெர்லைட் ஆலையில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் நீர் மாசுபடுவதை தடுக்கும் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையின் 2வது அலகின் விரிவாக்க பணிகளுக்கு உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை நேற்று தடை விதித்த நிலையில், இன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின் பேரின் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இனி ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்;;பேயில்லை. அரசியல்வாதிகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் செலவு செய்த தொகையை, மாசுபாட்டை குறைப்பதற்கான மக்களின் ஆலோசனைகளை செயல்படுத்துவதில் செலவிட்டிருக்கலாம். 1.உயிர்கள்13, 2.ஸ்டெர்லைட், 3.அதிமுக! என்று, மக்கள் போராட்ட வெற்றிக்கு இவ்வளவு பெரிய விலைகள் கொடுத்திருக்க வேண்டாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,797.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



