27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: விடுதலை பெற்ற இந்தியாவில்- தமிழகம் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக வளர்ச்சி பெற்று வந்திருக்கிறது. தமிழகத்தைத் தொடர்ந்து ஆண்ட திமுகவும், அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவின் மற்றெந்த மாநிலங்களை விடவும் நான்கு அதிரடி உச்சங்களைச் சாதித்திருக்கிறது. இந்தியாவில்; வளர்ந்த மாநிலமாகச் சொல்லப்படுகிற மாநிலங்கள் எதுவும், அந்த மாநிலத்தின் பத்து படிகள் வளர்ந்து விட்ட பத்து பேர்களை அடையாளம் காட்டுகின்றன. ஆனால் தமிழகமோ ஏறத்தாழ அத்தனை பேருமாக ஒற்றைப் படி உயர்ந்திருக்கிற சமூக நீதிக்கானது தமிழகம் என்று தரவுகளை அடுக்கோ அடுக்கு என்று அடுக்குகிறார். சாதனைத் தமிழன் சுரேஷ் சம்பந்தம். அதை ஒருங்கிணைத்து நம்மை நெஞ்சை உயர்த்தி நடக்கச் செய்கிறார் நீயா நானா கோபி. அருமையான காணொளி தவறாமல் பாருங்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



