நீட் தேர்வால் இன்னின்ன மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள் என்றுதெளிவாக பட்டியல் இட்டுச் சொல்லப்படுகிற அளவிற்கு தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்களைத் தட்டிப்பறிப்பதற்கு நீட் என்கிற தேர்வை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருவது மிகப்பெரிய சமூக அநீதியாகும். அந்த அநீதிக்கு ஒரேநாளில் மூன்று தமிழக மாணவர்கள் பலியாகியிருப்பது கொடுங்கோண்மையாகவும் சமூக ஆர்வலர்களால் உணர்த்தப்படுகிறது. 28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரே நாளில் மூன்று தமிழக மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்த கொண்டுள்ளது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தமிழக மாணவர்களுக்கு- பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் வந்த உடனேயே தெரிந்து விடுகிறது. தங்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்குமா கிடைக்காதா என்று. மருத்துவ இடம் இந்த மதிப்பெண் உள்ளவர்களுக்கு கிடைக்கும் என்ற நிலையில்- பெரும்பாலும் அந்த வாய்ப்பு தட்டிப்பறிக்கப்படும் நீட் என்கிற கொடுமையால். இந்தக் கொடுமை ஒற்றிய பாஜக அரசால் கடந்த சில ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் சில ஆயிரம் தமிழக மாணவர்கள் “காசு கொடுத்து வாங்கிய பழத்தை குரங்கு தட்டி பறித்துச் சென்ற கதையாக” பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குரங்குக்கு அதன்பசி பெரிது! நமக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய தமிழக அரசு, போராடி நிர்பந்திக்க வேண்டிய அரசியல் கட்சிகள், ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்பட போவதென்னவோ சில ஆயிரம் தமிழக மாணவர்கள்தாமே என்று கணக்கிட்டு அலட்சியம் காட்டுகின்றனரோ என்ற அச்சம் சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. நீட் தேர்வால் இன்னின்ன மாணவர்கள் பாதிக்கப் பட்டார்கள் என்றுதெளிவாக பட்டியல் இட்டுச் சொல்லப்படுகிற அளவிற்கு தமிழக மாணவர்களின் மருத்துவ இடங்களைத் தட்டிப்பறிப்பதற்கு நீட் என்கிற தேர்வை ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்து வருவது மிகப்பெரிய சமூக அநீதியாகும். நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதி துர்கா, தருமபுரி மாணவர் ஆதித்யா ஆகிய மாணவர்கள் தற்கொலை செய்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த மின்பொருள் விற்பனைக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவரின் மகன் மோதிலால் எனகிற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மோதிலால் மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுத உள்ளார். இன்று தேர்வு நடக்க உள்ள நிலையில், தேர்வு பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வினால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து உள்ள நிகழ்வு சமூக ஆர்வலர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. நீட்டால் தொடர்ந்து ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு புறக்கணிக்கப்படும் போது, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக கிராமங்களில் மருத்துவர்கள் பஞ்சம் ஏற்படும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



