இயற்கை வஞ்சிக்க வில்லை, கத்திரிவெயில் தொடங்கப்போகும் நிலையில், சென்னையில் கோடை மழை பெய்து புவியைக் குளிரூட்டுகிறது. கொரோனாவை விட அதைத் தடுக்கிறேன் என்று முன்னெடுத்த ஊராடங்கில்தாம் பெரிதும் சின்னபின்னமாகிக் கொண்டிருக்கிறோம். செய்கை, சேர்க்கை, தலைமைத் தேர்வு சரியில்லை என்பதாக இயற்கை உருத்து வந்து ஊட்டிக் கொண்டிருக்கிறது. மீண்டெழுவோம் விரைவில். 13,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 40 நாட்கள் நிவாரணம் இல்லாத, மக்கள் விலைகொடுப்பில், அரசின் அதிகாரப்பாடான ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனாலும் நாடு முழுவதும், நம்தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் தனிப்பாதையில் தொடர்ந்து வருகிறது. இதனால் 8 மாவட்டங்களில் இன்று முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தமிழகத்திற்கு மட்டுமானதாக இல்லாமல் ஒட்டு மொத்த மனித இனத்திற்குமான செயற்கை தந்த சோகப்படாக உலா வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கத்திரிவெயில் தொடங்கவிருக்கிறது. இந்த நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை கொட்டியது. இதனால் கோடையின் உக்கிரம் முன்பாகவே தடுக்கப் பட்டிருக்கிறது. இயற்கை- மழை என்கிற நீராதாரத்தைக் கொடுத்து சூட்டைத் தணித்திருக்கிறது. மங்குனி அரசுகள்- நிவாரணம் இல்லாத ஊரடங்கை, அதிகாரப்பாட்டில் அறிவித்து, மக்களின் சூட்டை எகிறச் செய்து கொண்டிருக்கிறது. செய்கை, சேர்க்கை, தலைமைத் தேர்வு சரியில்லை என்பதாக இயற்கை உருத்து வந்து ஊட்டிக் கொண்டிருக்கிறது. மீண்டெழுவோம் விரைவில்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



