வடக்கின் கண்ணசைப்பால், முன்னால் முதல்வர் பழனிசாமிக்குப் போட்டியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருந்த பன்னீருக்கு இல்லை எதிர்க்கட்சித் தலைவர் பதவி. 27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழக எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இது குறித்த தகவல் அதிமுகவின் அதிகாரப்பாட்டு கீச்சுப் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு கிழமையாக அதிமுகவில் யார் எதிர்க்கட்சி தலைவர் என்று முடிவு செய்யாமல் இழுபறி ஏற்பட்டது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், வடக்கின் கண்ணசைப்பால், முன்னால் முதல்வர் பழனிசாமிக்குப் போட்டியாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்கு வேண்டும் என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்று 2வது முறையாக நடந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தகவல் முதன் முதலாக அதிமுகவின் அதிகாரப்பாட்டு கீச்சுப் பக்கத்தில் வெளியானது. இதனை கட்சியின் செய்தி தொடர்பாளர் சசிரேகா உறுதி செய்தார்.
தொடர்ந்து முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி அதிமுக சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சட்டமன்றச் செயலரிடம் வழங்கினர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.