இன்றிலிருந்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் இரண்டு கிழமைகள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனி, ஞாயிறு இரு நாட்களில் மட்டும் 854.93 கோடி ரூபாய்க்கு மதுபானம் தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது. 27,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கும் இரண்டு கிழமைகள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் சனிக்கிழமை மட்டும் 426.24 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையானது. ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழகத்தில் 428.69 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றுள்ளது. சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 98.96 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன. திருச்சி மண்டலத்தில் 87.65 கோடி ரூபாய், மதுரையில் 97.62 கோடி ரூபாய், சேலத்தில் 76.57 கோடி ரூபாய், கோவையில் 67.89 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. சனி, ஞாயிறு இரு நாட்களில் மட்டும் 854.93 கோடி ரூபாய்க்கு மதுபானம் தமிழகத்தில் விற்பனையாகியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.