09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறங்கூற்று மன்றம் கைவிரித்த நிலையில், மக்கள் மன்றத்தில் தங்கள் தரப்பு நியாயத்;தை முன் வைக்க, தினகரனின் இடைத்தேர்தலைச் சந்திப்பது என்கிற முடிவால் எடப்பாடியும் பன்னீரும் பீதியடைந்துள்ளனர். தினகரன் அறங்கூற்று மன்றத்தையே நம்பி கொண்டிருந்தால் இந்த ஐந்தாண்டு ஆட்சியில் சுருட்ட வேண்டிய அளவிற்கு சுருட்டிக் கொள்ளலாம் என்று எடப்பாடியும் பன்னீரும் நினைத்திருந்த நிலையில், தினகரனில் இடைத்தேர்தல் சந்திப்பு முடிவை அவர்களால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அறை போட்டு சிந்தித்து: ஊழல் தடுப்பு சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள்தான் ஆறு ஆண்டுகளுக்கு எந்த ஒரு தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால், கட்சி தாவலுக்காக, அவைத்தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், உடனடியாக இடைத்தேர்தலில் கூட போட்டியிடலாம் என்று சட்ட வல்லுனர்கள் ஆணித்தரமாகக் கூறுகிறார்கள். தினகரன் தரப்பு மூத்த வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியன் இதே கருத்தைத்தான் பிரதிபலித்தார். அவர் கூறுகையில் தகுதி நீக்கப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். அல்லது இடைத் தேர்தலிலும் போட்டியிடலாம், அல்லது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொண்டே தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறான மூன்று வாய்ப்புகள் அவருக்கு உள்ளது என்பதை ராஜா செந்தூர் பாண்டியன் உறுதிபட தெரிவித்தார். தினகரன் அப்படியெல்லாம் சளைத்தவர் அல்லர். இந்தப் புரளி உண்மையாக்கப் பட்டாலும் கூட, அந்தப் 18 பேரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பளித்து, எடப்பாடி, பன்னீர் அணியின் சதியை முறியடிப்பார் என்று பெருமையாக பேசுகின்றனர் தினகரன் அன்பாளர்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,952.
தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



