Show all

தினகரன் தமிழக முதல்வர் ஆவதற்கான வாய்ப்பும் இருக்கிறது! தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் உடனடியாக வந்தால்

09,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. உறுப்பினர் போஸ் மறைவால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருந்து வருகின்றன.

இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவு அளித்த 18 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கம் செல்லுபடியாகும் என்று நேற்று தீர்ப்பு வந்துள்ளது. இதனால், தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில் தமிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 214 ஆக உள்ளது. இதை வைத்து பெரும்பான்மையைக் கணக்கிடும்போது அதிமுக அரசுக்கு 108 சட்;டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவையாக உள்ளது. தற்போது, அதிமுகவுக்கு அவைத்தலைவரையும் சேர்த்து 116, திமுகவுக்கு 88, காங்கிரஸ் கட்சிக்கு 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என்ற வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக தினகரன் உள்ளார்.

ஆனால், அதிமுகவில் உள்ள ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன் (விருத்தாசலம்), பிரபு (கள்ளக்குறிச்சி) ஆகிய 3 பேரும் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அதிமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த கருணாஸ் (திருவாடானை), உ.தனியரசு (காங்கேயம்), தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம்) ஆகிய 3 பேரும் திமுக மற்றும் தினகரனுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர்.

இதை வைத்து பார்க்கும்போது, அதிமுக சட்டமன்றஉறுப்பினர்கள் உண்மையான பலம் 110 என்ற நிலையிலேயே இருக்கிறது. பெரும்பான்மையுடன் இதை கணக்கிடும்போது, கூடுதலாக 2 மட்டுமே உள்ளது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் அதிமுக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அதிமுகவில் உள்ள 3 சட்டமன்றஉறுப்பினர்கள் மாற்றி வாக்களித்தாலே ஆட்சி கலைந்து விடும் அபாயம் உள்ளது.

இதுபோன்ற பாதகமான சூழ்நிலையில், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எப்படியும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அந்தத் தேர்தலில் 20 இடங்களில் கட்டாயம் 2 இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியும் அதிமுகவுக்கு இருக்கிறது.

அதே நேரத்தில், முதன்மை எதிர்க்கட்சியான தி.மு.க. கூட்டணிக்கு தற்போது பலம் 97 ஆக உள்ளது. இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுடன், தினகரனின் ஆதரவையும் பெற்றால், பெரும்பான்மை எண்ணிக்கையான 118ஐ திமுகவால் எட்ட முடியும். ஆட்சி அரியணையிலும் திமுகவால் அமர முடியும்.

ஆனால் இடைத்;தேர்தலில். தினகரன் அணியினர் தங்கள் தொகுதியான 18 தொகுதிகளை தமிழக மக்களிடம் இருந்து பெற முடியும். அப்படி தினகரன் மீண்டு வரும்போது, பாஜகவின் அதிகார பலத்தில் குப்பை கொட்டி கொண்டிருக்கும் எடப்பாடி- பன்னீர் அதிமுகவின் நிழல் அரசு நிற்காது. இரண்டு ஆண்டு ஆட்சியை விரும்பாமல் திமுகவும், காங்கிரசும் குமாரசாமி போல தினகரனுக்கு ஆட்சி வழங்கும் வாய்ப்பு நிறைய இருக்கிறது. தினகரனுக்கு, தமிழக முதல்வர் ஆவதற்கான வாய்ப்பும், அதிமுகவை மீட்டெடுப்பதற்கான வலிமையும் நிறைய இருக்கிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,952.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.