Show all

உலகம் சுற்றும் மோடி! உள்நாட்டில் உள்ள பாஉக்கள், சமஉக்களுடன் காணொளி மூலம் கலந்துரையாடல்

08,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக நாடுகள் 195ல் சரியாக 56 நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்று வந்துள்ளார். அதிலும் சரியாக இரண்டே முக்கால் ஆண்டுகளில். 

பூடான் சென்ற போது மோடியின் பயணத்துக்கு மத்திய அரசு செய்த செலவு ரூ.2,45,27,465 

பிரேசில் பயணத்துக்கு ரூ.20 கோடி ஜப்பான் சென்றதற்கு 13 கோடி செலவாகியுள்ளது. 

இது இப்படியே அடுத்தடுத்த உலக நாடுகளின் பயணத்துக்கு 20, 30 என சில பல கோடிகளைக் எட்டியது. இப்படி கோடிக் கணக்கில் செலவு செய்து உலகம் முழுதும் சுற்றும் நமது இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி அவர்கள், பாஜகவைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுடன் நாளை காணொளித் தொடர்பின் மூலம் கலந்துரையாடுகிறார். 

பாஜவுக்கு மக்களவையில் 274 உறுப்பினர்கள், மேலவையில் 68 உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதும், 1455 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களுடன் நாளை காலை 11 மணிக்கு நரேந்திர மோடி செயலி மூலம் காணொளி தொடர்பு முறையில் கலந்துரையாட உள்ளார். இதை பாஜக தெரிவித்துள்ளது.

இந்த மாதிரி தலைமை அமைச்சர் கிடைப்பதற்கு நம் இந்திய மக்கள் எத்தனை யுகங்கள் தவமாய் தவமிருந்தனரோ!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,764.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.