Show all

கொரோனாவுக்கு எதிராக, அஜித்தின் புதிய முயற்சி மற்றும் சிறப்பான களப்பணி! தானுலங்கி மூலம் நுண்நச்சு கொல்லி தெளிப்பு

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய ‘தக்சா’குழு தமிழக அரசுடன் இணைந்து தானுலங்கி மூலம் சென்னையில் நுண்நச்சு கொல்லி தெளித்து வருகிறது. 

10,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: கொரோனா நுண்நச்சுப் பரவலைத் தடுக்க மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், நலங்குப்பணியாளர்கள், காவலர்கள், என பலரும் இரவும் பகலுமாக பணிபுரிந்து வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் நுண்நச்சு கொல்லி தெளிக்கப்பட்டு வருகின்றன. இதில் சிவப்பு மண்டல பகுதிகளில் தானுலங்கி (டிரேன்) மூலம் நுண்நச்சு கொல்லி தெளிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தானுலங்கி மூலம் நுண்நச்சு கொல்லி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் தான் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்திக் நாராயணன், சிகப்பு மண்டலங்களில் தானுலங்கி மூலம் நுண்நச்சு கொல்லி தெளிக்க நடிகர் அஜித்தின் தக்சா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், திருநெல்வேலி மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அஜித் பார்ப்பதற்கு அமைதியாக இருந்தாலும், சென்னையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நிறைய பங்காற்றி இருப்பதாகவும் மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்துள்ளார் 

நடிகர் அஜித் ஆலோசகராக பயிற்சி வழங்கிய ‘தக்சா’குழு தமிழக அரசுடன் இணைந்து தானுலங்கி மூலம் சென்னையில் நுண்நச்சு கொல்லி தெளித்து வருகிறது. 

இதனிடையே தானுலங்கிகளின் திறனை அதிகரிக்க முடிவு செய்த தக்சா குழு அதற்காக பல்வேறு மாற்றங்களை தானுலங்கிகளில் செய்துள்ளனர். அதன்படி 16 லிட்டர் அளவிற்கு நுண்நச்சு கொல்லிகளைச் சுமந்து செல்லும் வகையில் தக்சா குழுவினர் தானுலங்கிகளை மேம்படுத்தியுள்ளனர். இதன் மூலம் ஒரு ஏக்கர் நிலத்தில் 30 விநாடிகளில் நுண்நச்சு கொல்லி தெளிக்க முடியும்.  இந்த மேம்படுத்தப்பட்ட தானுலங்கி சோதனை ஓட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. 

கொரோனா தடுப்பு பணியில் நடிகர் அஜித்தின் இந்தப் புதுவித யோசனை முதன்மைப் பங்கு வகிப்பதாக மருத்துவர் கார்த்திக் நாரயணன் தெரிவித்திருப்பதையடுத்து அவரது ரசிகர்கள் கீச்சுவில் கொரோனாவிற்கு எதிரான அஜித்தின் தானுலங்கி மூலமான செயல்பாட்டை தலைப்பாக்கி வருகின்றனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.