தமிழ்நாட்டில் கொரோனா அன்றாட பாதிப்பு தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. அன்றாட பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகின்றது. அந்த வகையில் இன்று 8,183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்றைக்கு 180 பேர்கள் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா அன்றாட பாதிப்பு தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. அன்றாட பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. அன்றாட உயிரிழப்பும் கணிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,183பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் கொரோனா மொத்த பாதிப்பு 24,14,680 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 31 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,015 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 18,232 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,04,885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் 78,780 பேர்கள் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,65,102 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,01,90,838 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 468 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 2-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. ஆனால் உயிரிழப்பில் சென்னைதான் முதலிடம் வகிக்கிறது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் மட்டும் 1014 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 334 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 128 பேருக்கும், மதுரையில் 145 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 150 பேருக்கும், திருவள்ளூரில் 207 பேருக்கும், திருச்சியில் 242 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 489 பேருக்கும், விருதுநகரில் 119 பேருக்கும், ஈரோட்டில் 933 பேருக்கும், சேலத்தில் 533 பேருக்கும், நாமக்கல்லில் 328 பேருக்கும், தஞ்சாவூரில் 361 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.