தமிழக மக்கள் கொரோனாவை எளிமையாக புரிந்து கொள்வோம். இந்தியாவில் இரண்டாம் நிலை பரவல், அடுத்து வரப்போகிறது மூன்றாம் நிலை பரவல் என்கிற மாதிரியான நிபுணர்களின் கலைச்சொல்லாடல் குறித்து தமிழர்கள் கவலை கொள்ள வேண்டாம். இப்படியே இயல்;பாக இருங்கள், தமிழக நலங்குத் துறை அமைச்சர் தெரிவிப்பது போல கொரோனாவை மாத இறுதிக்குள் முறியடித்து விடலாம். 07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனா போல இந்தியாவில் இனிதான் கொரோனா வேகமாகப் பரவுமா? இந்தியாவில் எப்போது கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் தனது கோரமுகத்தை காட்டும் அளவுக்கு மிக வேகமாக பரவும்? என்ற அச்சத்துடனான கேள்விப் பல பொது மக்கள் மனதில் எழுந்துள்ளது. வேகமாகவோ, மெதுவாகவோ பரவுவதை கொரோனா தீர்மானிப்பதில்லை. கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என்பது எல்லா துறைகளுக்கும் பொருந்தும். கொரோனா வேகமாக பரவுவதற்கும், மெதுவாகப் பரவுவதற்கும் நாமும் நமது அரசுகளுமே காரணம். மற்ற நாடுகளுக்கும் அதுதான் நியதி. தமிழ்நாடு அரசைப் பொறுத்த வரை, வெகு தொடக்கத்திலிருந்தே கொரோனா பரவும் வாய்ப்புகளைக் கவனமாக கண்காணிக்கத் தொடங்கி விட்டது. நடுவண் அரசு விமானத்தை இரத்து செய்யாத நிலையிலும், வெளிநாட்டில் இருந்து இறங்குகிற ஒவ்வொருவரையும் கவனமாக பரிசோதித்து, கொரோனா நோயாளிகளைக் கண்டறிந்து இன்று வரை தனிமைப்படுத்தி வருகிறது. இதுவரையிலுமே மூவர் மட்டுமே கெரோனா நோயுள்ளவர்களாக அறிப்பட்டிருக்கிறார்கள். கொரோனா நுண்ணுயிரி சீனாவில் நோய்த் தொற்றை உருவாக்கியது. கெரோனா தொற்று தொடங்கியது ஒரு சிறு குழுவில்தான். இந்த நோய் தொற்றியவர்கள், இருமினால் காற்றின் மூலமும், மற்றவர்களைத் தொட்டால் அவர்கள் கைகள் மூலமும், அவர்கள் தொட்டுச் சென்ற பொருள்கள் மூலமும் என்று இந்த நோய்ப்பரவல் பல பரிமானங்களில் பரவ சீனா அனுபவம் இன்மையால் அனுமதித்தது. தொடக்கத்தில் வுகான் நகரம் முழுவதும் பரவியது. தொடர்ந்து சீனாவின் மற்ற மாநிலங்களுக்கும் பரவியது. இந்தத் தகவலை எல்லாம் சீனா கண்டுபிடிப்பதற்கே ஒருமாதத்திற்கு பக்கமாக ஆகிவிட்டதால் சீனாவின் கையை மீறி சீனாவிற்கு வந்து சென்ற சீனாவோடு தொடர்பில் இருந்த நோயாளிகளோடு ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இணைந்த அனைத்து நாட்டவர்களுக்கும் பரவத் தொடங்கியது. சீனா வுகான் நகர் தொடர்பைத் துண்டித்து மற்ற மாநிலங்களில் பரவலைத் தடுத்தது. ஆனால் மற்ற நாடுகள் சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து பரவலுக்கு எதிரான உடனடி தீர்வு காண முயலாததுதான் உலகத்தின் சோகம். இதனால் இந்தியா சீனாவுக்கு மட்டுமான தொடர்வைத் துண்டித்தால் போதும் என்ற நிலையைத் தாண்டி, கெரோனா பரவி விட்ட உலக நாடுகள் அனைத்தின் தொடர்பையும் துண்டிக்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா ஆளானது. இதனால் தமிழகம் இன்னும் ஒருபடி மேலே சென்று சீனா, மற்ற நாடுகள், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் என்று தமிழகத்திற்கு தொடர்பைத் துண்டிக்க வேண்டிய எல்;லை வெகுவாக விரிந்தது. இப்போது அரசு நடவடிக்கையைத்; தாண்டி மக்கள் நடவடிக்கை தொடங்கி விட்டது. மக்கள் பயணிப்பதை நிறுத்தி விட்டதால் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னையிலிருந்து பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து செல்லும் 30 விமானங்களும், குறிப்பிட்ட நகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் 30 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. மக்கள் பயணிப்பதை நிறுத்தி விட்ட (கொரோனா அச்சுறுத்தல்) காரணமாக சென்னையில் ஒரே நாளில் 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை விமானநிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழக அரசோடு தமிழகமக்களும் இணைந்து- இந்திய அரசுக்கும், உலக நாடுகளையும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறார்கள். இதே போலவே தமிழகத்திற்கு வந்து போகும் பெரும்பாலான தொடர் வண்டிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை, மக்கள் அனைவரும் இணைந்து சுய ஊரடங்கை கடைப்பிடிப்போம் என்ற தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியின் அழைப்பு தமிழகத்தைப் பொறுத்த வரை கொல்லன் தெருவில் ஊசி விற்றகதைதான். ஆக மொத்தம் தமிழக மக்கள் கொரோனாவை எளிமையாக புரிந்து கொள்வோம். இந்தியாவில் இரண்டாம் நிலை பரவல் அடுத்து வரும் மூன்றாம் நிலை பரவல் என்கிற மாதிரியான நிபுணர்களின் கலைச்சொல்லாடல் குறித்து தமிழர்கள் கவலை கொள்ள வேண்டாம். இப்படியே இயல்;பாக இருங்கள், தமிழக நலங்குத் துறை அமைச்சர் தெரிவிப்பது போல கொரோனாவை மாத இறுதிக்குள் முறியடித்து விடலாம்.
மலேசியா, இலங்கை, குவைத், சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் 29 விமானங்களும், அதேபோல் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் 29 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



