ஊரடங்கால் மக்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றார்கள். தற்போதைக்கு பணம் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம், வங்கிக் கடன் என்று சுற்றிவளைக்;கத் தேவையில்லை என்று வாதிடுகிறார் இராகுல் காந்தி 04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பசியால் வாடும் மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இருந்து காணொளிக் காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த இராகுல் காந்தி, நெடுஞ்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும் போது வருத்தமளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடுவண் அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தை பசியால் வாடும் மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், நாட்டு மக்களுக்கு தற்போதைக்கு பணம் நேரடியாக கிடைக்க வேண்டுமே தவிர வங்கிக் கடன் தேவையில்லை என்று கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



