சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேமுதிக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தேமுதிகவின் நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கட்சியின் தலைவராக உள்ளார். தேமுதிகவில் பொதுச் செயலாளர் பதவி என்பது புதிதாக ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் விஜயகாந்த் பேசுகையில், தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமெனில் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்கக் கூடாது. இந்தியா நன்றாக இருக்க வேண்டுமெனில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாளை மறுநாள் தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். என்று தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



