தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலை, நவம்பர் 17 அன்;றுக்குள் நடத்த வேண்டும் என்று உயர் அறங்கூற்றுமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 18 அன்றுக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு, நவம்பர் 17 அன்றுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் அறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தலைமையிலான அமர்வு அளித்திருக்கும் தீர்ப்பை வரவேற்கிறேன். உள்ளாட்சி ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் உயர் அறங்கூற்றுமன்றத்தின் இந்த மிக தலையாய தீர்ப்பு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ‘குதிரை பேர’ அரசின் அடாவடிப் போக்குக்கு ஓர் எச்சரிக்கை மணியாக அமைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தி.மு.க சார்பில் உச்ச அறங்கூற்று மன்றத்தில் இன்று முன்னெச்சரிக்கை மனு பதிகை செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏதேனும் மனு பதிகை செய்யப்பட்டால், எங்கள் தரப்பு விளக்கத்தைக் கேட்ட பின்னரே தீர்ப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி பதிகை செய்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



