11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச அறங்கூற்று மன்றம் 6 கிழமைகள் அவகாசம் அளித்துள்ள நிலையில், நடுவண் அரசு இன்னும் இழுத்தடிப்பு முயற்சிகளையே மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், காவிரி விவகாரத்திற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் தினகரன் இன்று தஞ்சாவூரில் உள்ள திலகர் திடலில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதுபற்றி அவர் கூறும்பொழுது, தமிழக மக்கள் போராடியே காவிரி மேலாண்மை வாரியம் பெற வேண்டும். கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமையாது. நடுவண் அரசு மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என கூறி தமிழகத்தினை சோமாலியாவாக ஆக்க முயற்சிக்கிறது. நடுவண் அரசால் தொடர்ந்து தமிழகத்தின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,737
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



