உலகம் அஞ்சிய சாத்தான் யாரென்று தெரிந்தால் வியந்து போவீர்கள்! என்கிற கட்டுரையின் இரண்டாவது பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தக் கட்டுரை: சாத்து, சாத்தனார், சாத்திரம் என்று தமிழ்முன்னோர் நிறுவிய பொருள் பொதிந்த தமிழ்ச்சொற்களிலிருந்து மருவிய சொற்களான சாத்தான், சாத்தான்வேதம், சாஸ்திரம், சாது, சித்தம், சிந்தாந்தம், சித்தமருத்துவம் ஆகிய சொற்களைப் பட்டியல் இடும் நோக்கத்திற்கானது. ஐம்பொழுது: தமிழ்முன்னோர் நிறுவிய 'சாத்து சாத்தனார் சாத்திரம்' ஆகிய மூலச்சொற்களைப் புறந்தள்ளி, இந்தத் தமிழ்ச்சொற்களிலிருந்து மருவிய சொற்களான சாத்தான், சாது, சாத்தான்வேதம், சாஸ்திரம், சித்தம், சிந்தாந்தம், சித்தமருத்துவம் ஆகிய சொற்களை காரணம் மருவி இடுகுறியாக உலகினர் பயன்படுத்தி வருகின்றனர். அந்தப் பயன்பாடுகளையே நடப்பில் தமிழினமும் பயன்படுத்தி வருவதற்கு: பிராமணர் வருகைக்குப் பிந்தைய கடந்த 3500 ஆண்டுகளாக, ஒற்றைத் தமிழனும், அறிவார்ந்தநிலையில், தமிழியலில் இருப்பதாக அறியக்கிடைக்கவில்லை. கடந்த 3500 ஆண்டுகளாகத் தோன்றிய அத்தனைத் தமிழர்களும், தமிழர்களின் அமைப்புகளிலும், கட்சிகளிலும், இலக்கியம், கல்வி உள்ளிட்ட அனைத்துக் கட்டுமானங்களிலும் பிராமணிய ஆதரவாளர்களாகவோ, பிராமணிய எதிர்ப்பாளர்களாகவோதாம் உலா வருகின்றார்கள் என்பதே காரணியம் ஆகும். சாத்து: சாத்தனார்: சாத்திரம்: இந்த மூன்று தலைப்புகளைப் பற்றிய முழுப்புரிதலோ தெளிவோ இல்லாத, பெறமுயலாத உலகினர் தங்கள் அறிந்த சில பல செய்திகளின் அடிப்படையில் இடுகுறியாகக் கட்டமைத்துக் கொண்ட புனைவுகள் போற்றும் தலைப்புகளே- சாத்தான், சாத்தான்வேதம், சாஸ்திரம், சாது, சித்தம், சிந்தாந்தம், சித்தமருத்துவம் போன்ற மருவுகள் ஆகும். சாத்தனாரை அஞ்சிய காரணம்பற்றி உலகினருக்குக் கிடைத்த தலைப்பு சாத்தான். சாத்திரத்தை அஞ்சிய காரணம் பற்றி உலகினருக்கு கிடைத்த தலைப்பு சாத்தான்வேதம் மற்றும் சாத்தானால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் மறுக்கப்பட்டகனியும் ஆகும். பிராமணர்கள் தங்கள் முன்னெடுத்த அனைத்து பிராமணிய நூல்களுக்கும் சாஸ்திரம் என்கிற தலைப்பைக் கொண்டாடி வருகின்றனர். பிராமணிய எதிர்ப்பில் கட்டுமானம் செய்யப்பட்ட மதமான பௌத்தம் தங்கள் ஒருங்கிணைப்பாளருக்கு சாது என்கிற தலைப்பை சூட்டி மகிழ்கிறது. சாத்தனார்கள் கப்பல் பயணத்தின்போது, கப்பலின் முதலுதவி பெட்டியில் பேணியிருந்த மூலிகைகள் குறித்த தமிழ்மருத்துவத்தை, சாத்தனார்கள் மட்டுமே அறிந்த பாடாக, பிழையாகக் கருதி, சித்தமருத்துவம் என்கிற தலைப்பு தமிழ்மருத்துவத்திற்கு உரித்தாக்கப்பட்டு விட்டது. சித்தமருத்துவத்தின் தொடர்ச்சியாக அறிவுக்கு சித்தம் என்றும் பிராமணித்தை மறுக்கிற பிற்காலக் கோட்பாட்டிற்கு சிந்தாந்தம் என்றும் தலைப்புக்கள் வழங்கப்படுகின்றன.
1.கிழமை: கருக்கரிவாள்கிழமை
2.நாள்: 03
3.மாதம்: தை
4.தமிழ்த்தொடராண்டு: 5127
5.தமிழ்த்தொடர்நாள்: 1872592
கடற்கரை அமைந்த நாடுகளுக்கு எல்லாம் கப்பல் மூலமாக வணிகம் புரிந்த தமிழ்க்கூட்டத்திற்கு தமிழ்முன்னோர் நிறுவிய தலைப்பு சாத்து.
சாத்து என்கிற வணிகக் கூட்டங்கள் மிகப்பலவாகும். ஒவ்வொரு சாத்தின் ஒருங்கிணைப்பாளாருக்கு தமிழ்முன்னோர் நிறுவிய தலைப்பு சாத்தனார்.
அந்த வணிகக் கூட்டங்கள் கற்றுத் தேர்ந்திருந்த 1.காப்பிம் 2.இலக்கியம் 3.நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் என்கிற இயல்கணக்கிற்கு தமிழ்முன்னோர் நிறுவிய தலைப்பு சாத்திரம்.



