Show all

தமிழிசையைக் கருத்துப் படங்களிலும், தொலைக்காட்சியிலும்தாம் பார்த்து சிரித்திருக்கிறாராம்! நம்மைப் போல தினகரனும்

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரில் சிறையில் உள்ள சசிகலாவை, இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் தினகரன் சந்தித்து பேசினார். இதன்பிறகு நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, எங்கள் கொள்கை மதசார்பின்மை. மத நல்லிணக்கத்தை விரும்பும் கட்சி நாங்கள். சாதி மத வேறுபாடு இல்லாத கட்சி நாங்கள். எனவே அவர்கள் கொள்கைகள் எங்களுக்கு ஒத்துவராது.
நான் தமிழிசையை நேரில் பார்த்ததே கிடையாது. இணைய கருத்துப் படங்களிலும், தொலைக்காட்சியிலும்தான் பார்த்துள்ளேன். நான் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, பொன்.ராதாகிருஷ்ணனை பார்த்துள்ளேன். சி.பி.ராதாகிருஷ்ணனை கூட பார்த்துள்ளேன். இப்போதுள்ள பாஜக தலைவர்கள் யாரையும் பார்த்தது இல்லை. திமுகவுடன் சேருவதற்குப் பேசாமல் அரசியலை விட்டுப் போய் விடலாம்.

எங்கள் குடும்பத்தை பற்றி பன்னீர் செல்வம் தப்பாக பேசியவர்தான். இருந்தாலும், அவராக மன்னிப்பு கேட்டு வந்ததால் பேசினேன். எடப்பாடி மற்றும் பன்னீர் உடன் சேருவது என்பது தற்கொலை முடிவு. இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,933.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.