திருச்சியில் மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மலைக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர். 24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காரணமாக 44 நாட்களாக டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. மக்கள் தொழில் வருமான பாதிப்;பைக் கருத்தில் கொண்டு, கடந்த திங்கள்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்படத் தொடங்கியது. இன்று முதல் மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானக் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், காலை முதலே மதுக்குடியர்கள் 2-3 கி.மீ தூரத்துக்கு வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். திருச்சி மலைக்கோட்டை அருகே பெரிய கடை வீதி பகுதியில், மது அருந்தி விட்டு படுத்திருந்தவர் உயிரிழந்துள்ளார். மதுவினால் உயிரிழந்துள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று மலைக்கோட்டை காவல் நிலைய காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



