ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் வேதியியல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஊரடங்குத் தளர்வில், இயக்கம் மேற்கொண்டபோது 24,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருக்கும் எல்ஜி பாலிமர் வேதியியல் தொழிற்சாலையில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு நச்சுவாயு கொள்கலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. அந்த கொள்கலனின் நச்சுவாயு வெளியேற்றத்தின் காரணமாக 8 பேர் பலியாகி உள்ளனர். 5000க்கும் அதிகமானோர் சுயநினைவை இழந்து மொத்தமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். ஸ்டைரீன் என்ற நச்சுவாயு பரவல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விபத்து எப்படி நடந்தது என்று விசாகப்பட்டினம் மேற்கு பகுதிக்கான காவல்துறை துணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்த தொழிற்சாலையில் இரண்டு பெரிய வாயுநிரப்பு கொள்கலன்கள் இருந்துள்ளன. இதில்தான் விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு கொள்கலனில் ஒன்று 5000 டன் கொள்லளவு கொண்டது. இதில்தான் ஸ்டைரீன் எனப்படும் நச்சுவாயு இருந்துள்ளது. ஊரடங்கு காரணமாக கடந்த நாற்பது நாட்களில் இதை இயக்;;;;;;கவே இல்லை. இன்று காலை இதை மீண்டும் இயக்கி உள்ளனர். இத்தனை நாட்கள் இந்த வாயு உள்ளேயே அழுத்தத்தோடு இருந்துள்ளது. இதனால் அதில் வேதியியல் வினை ஏற்பட்டு, கொள்கலனில் பெரிய அளவில் வெப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கலனை இன்று அதிகாலை இயக்க முற்பட்ட போது அது மொத்தமாக வெடித்து சிதறியது. இதனால்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, இதை பற்றி மேலும் விசாரித்து வருகிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஊரடங்கு காரணமாக தொடர் இயக்கம் இல்லாததே காரணம் என்கிறார்கள். இந்த விபத்து ஏற்பட்ட போது, அந்த தொழிற்சாலைக்குள் சில பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆனால் இவர்களின் நிலை என்ன, இவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதனால் பலர் மயக்க நிலைக்குச் சென்று இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அங்கு தீவிரமான மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



