Show all

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ளது பேயா! பரபரப்பில் ஈரோடு

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான இந்தக் காட்சியைப் பார்த்த கட்டுப்பாட்டறை காவல்துறையினர் சிலர் பேய் உருவம் எனக் கூறி உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஈரோடு அருகே சாலையில் திடீரென வெள்ளை உருவம் ஒன்று தோன்றி மறைந்த கண்காணிப்புப் படக்கருவியில் பதிவாகியுள்ள காட்சியை பேய் எனக் கூறி சிலர் பகிர்ந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுடுகாடு மற்றம் மின்மயானத்திற்குச் செல்லும் வழியில்- ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே திடீரென சாலையின் நடுவே வெள்ளை நிற உருவம் ஒன்று தோன்றி, பெரிதாகி எதிரே வந்த காரில் மறைந்தது. 

கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான இந்தக் காட்சியைப் பார்த்த கட்டுப்பாட்டறை காவல்துறையினர் சிலர் பேய் உருவம் எனக் கூறி உயரதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். இந்த காணொளி சமூக வலைத்தளங்களிலும் பேய் நடமாடுவதாகக் கூறி வலம் வருகிறது. எனினும் இது வாகனங்களின் கண்ணாடியில் ஏற்பட்ட எதிரொளிப்பாக இருக்கலாம் எனவும் பேய்களை நம்பாதவர்கள் விளக்கம் அளிக்கின்றனர். காணொளியின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ஆய்வுகளும் நடைபெறுகின்றன.

எனினும் இது குறித்து: ஈரோட்டில் பேய்- ஈரோட்டில் பேயா? ஏன்? என்பன போன்ற கதைகள் உருவாக்கப்படாமல் இருந்தால் சரிதான். 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.