ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் டெல்லி சிபிஐ சிறப்பு
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏர்செல்
- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சன் குழும அதிபர் கலாநிதி மாறன், முன்னாள் நடுவண்
அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுவிப்பதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற
நீதிஅரசர் ஓபி ஷைனி தீர்ப்பளித்துள்ளார். இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்
தீர்ப்பை எதிர்த்து சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு
செய்ய உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



