சென்னை
மெரினாவில் வட மாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. சென்னை
மெரினாவில் வடமாநில இளைஞர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 144 தடை ஆணை அமலில்
உள்ள நிலையில் கொலை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினாவில்
சல்லிக்கட்டுக்கு ஆதரவாக அறவழிப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர்
தடியடி நடத்தி விரட்டினர். இதனால்
மெரினாவில் மீண்டும் கூடி மாணவர்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தலாம் எனக் கருதி காவல்துறையினர்
மாணவர்கள் கூடுவதை தடுக்கும் வகையில் மெரினாவில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்தத்
தடை உத்தரவு வரும் 12ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வடமாநில இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து
வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட இளைஞர் யார்? எதற்காக கொல்லப்பட்டார்?
என விசாரித்து வருகின்றனர். மெரினாவில்
144 தடை உத்தரவு உள்ள நிலையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



