சென்னை வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில்
சிட்கோ தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி
வருகின்றன. இங்குள்ள 8 நிறுவனங்கள், கடந்த சில ஆண்டுகளாக சென்னை மாநகராட்சிக்கு தொழில்
உரிமத்தை புதுப்பிக்கவோ, வரிகள் செலுத்தவில்லை என்று சொல்லப் படுகிறது. இதுகுறித்து
மாநகராட்சி வருவாய்துறை பலமுறை எச்சரிக்கை அனுப்பியும், அவர்கள் வரிகளை செலுத்தாமல்
மெத்தனமாக இருந்து வந்தனராம். இந்நிலையில், சென்னை மாநகராட்சி 4-வது மண்டல அதிகாரி
உத்தரவின்பேரில் இன்று காலை 11 மணியளவில் உதவி வருவாய் அதிகாரி சூர்யாபானு, ரங்கநாதன்,
தொழில் உரிம ஆய்வாளர் திருநாவுக்கரசு தலைமையில் வருவாய் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள்
சிட்கோ தொழிற்பேட்டைக்கு விரைந்து வந்தனர். தொழில்
உரிமம் புதுப்பிக்காத, வரி பாக்கி வைத்திருக்கும் சாகுல் என்பவருக்கு சொந்தமான ரெடிமேடு
துணிக்கடை, மாவர் என்பவரின் பேக்கேஜிங் யூனிட், பாசன்சந்த்தின் எலக்ட்ரிக்கல் பொருட்கள்
தயாரிப்பு தொழிற்சாலை, பவர்லாலின் எலக்ட்ரானிக் தொழிற்சாலை, லியோ சாம்ராஜின் மளிகை
கடை, சேகர் என்பவரின் பாத்திர கடை, முருகனின்
டீக்கடை மற்றும் முரளிகிருஷ்ணன் என்பவரின் டூ-வீலர் பழுதுபார்ப்பு நிலையம் ஆகிய 8 நிறுவனங்களையும்
மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். தொழில்களை
முடக்கும் இந்த நடவடிக்கைகளுக்கு மாற்று கிடையாதா? நிறுவனங்களை
முடக்கி சீல் வைத்தவுடன் அரசின்; கடமை முடிந்து விடுகிறதா?
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



