சசிகலா செயலலிதாவின்
எடுபிடிதானே செயலலிதாவிற்கு மாற்றாக சசிகலாவை மக்கள் அங்கிகரிக்க மாட்டார்கள்; அதனால்
சசிகலாவால் முன்மொழியப் பட்ட எடப்பாடி பழனிச்சாமியைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;
அடுத்த தமிழக ஆட்சி திமுகவிற்கு தான் என்று ஆதிக்க சக்தி ஊடகங்களால் தொடர்ந்து கருத்;;;;;;துப்
பரப்பப் பட்டு வருவதை உற்சாக மருந்தாக திமுக ஏற்றுக் கொண்டு, அதனால் 122 சட்டமன்ற உறுப்பினர்களால்
எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப் பட்டும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், “தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ்க்கப் படுமேயானால்,
அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஆதாயம்; திமுகவிற்கு ஆட்சி”
என்று பலரும் பல கோணத்தில்
நாக்கை தொங்க விட்டுக் கொண்டலையும் தமிழக அரசியல் நிலைமையில், செயலலிதாவால் முன்மொழியப்பட்ட பன்னீர் செல்வம்
பாஜக பின்புலத்தோடு சிறு சிறு நகர்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், இக்கட்டான நிலையில் சிக்கியிருக்கிற சிறு கட்சிகளைக்
கூட சுக்கு நூறாக சிதறடிக்கிற வழக்கத்தைக் கொண்டிருக்கிற திமுக தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையில், மிகக்குறைந்த
போராட்ட முதலீட்டில் அதிமுக ஆட்சியைக் கலைத்து விட முடியும் என்று உறுதியாக நம்புகிறது
திமுக. அதன் பொருட்ட மலிவான
திட்டங்களை தொடங்கி, தொடர்ந்து நடத்தி வருகிறது திமுக. தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற முயன்றபோது
பேரவைக் காவலர்களால் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்! இதனைக் கண்டித்து தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும்
சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம்,
நெய்வேலி, காட்டுமன்னார்கோவில் மற்றும் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தி.மு.க.வினர்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 322 பேர் கைது செய்யப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், உளுந்தூர்பேட்டை,
சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், செஞ்சி உள்பட பல பகுதிகளில் தி.மு.க.வினர்
சாலை மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் 2 அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. மாவட்டத்தில்
254 பேர் கைது செய்யப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் 38 இடங்களில் தி.மு.க.வினர்
போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 600 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை
மாவட்டத்தில் 20 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர்
கைது செய்தனர். சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில்
ஈடுபட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர். கொண்டலாம்பட்டியில் மறியலில் ஈடுபட்ட 20 பேரையும்,
அயோத்தியாபட்டணத்தில் 60 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம்,
அரூர், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, வௌ;ளிச்சந்தை, நல்லம்பள்ளி,
மொரப்பூர், கம்பைநல்லூர் உள்பட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, பர்கூர்,
காவேரிப்பட்டணம், ஓசூர், ஊத்தங்கரை, ராயக்கோட்டை, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட
பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்களை காவல்துறையினர் கைது
செய்தனர். நாமக்கல்லில் மறியல் செய்த மாநில துணை பொதுச்செயலாளர்
வி.பி.துரைசாமி உள்பட 56 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செங்கோடு, ராசிபுரம்,
பள்ளிபாளையம், மல்லசமுத்திரம் என மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை
காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி, பவானி, புளியம்பட்டி,
நம்பியூர், சத்தி, சென்னிமலை, அந்தியூர், கொடுமுடி என பல்வேறு இடங்களில் சாலை மறியலில்
ஈடுபட்ட 1,013 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட
முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். பீளமேடு,
சுந்தராபுரம் உள்பட மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 676 பேரையும்,
பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்பட மாவட்டம் முழுவதும் 1,876 பேரையும் காவல்துறையினர்
கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற இடங்களில்
மறியலில் ஈடுபட்ட 261 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மறியலில்
ஈடுபட்ட 87 பேரும், சத்திரம் பேருந்து நிலையம் அருகே 40 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூரில் சட்டப்பேரவை உருவபொம்மையை எரித்த 75 பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 75 பேரை
காவல்துறையினர் கைது செய்தனர். விக்கிரமங்கலம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, திருமானூர்
பகுதிகளில் மறியலில் ஈடுபட்ட 212 பேர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 593 பேரும், மதுரை மாவட்டத்தில்
18 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 750 பேரும் கைது செய்யப்பட்டனர். மதுரை மாநகரில் 5 இடங்களில்
போராட்டம் நடத்திய 525 பேர் கைதானார்கள். சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்
மறியல் செய்த 200 தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இலுப்பூர்,
கறம்பக்குடி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி, பொன்னமராவதி உள்பட பல்வேறு பகுதிகளில்
தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். கீரமங்கலம் பஸ் நிலையத்தில் நடந்த மறியலின்போது
கல் வீசி தாக்கியதில் அரசு பஸ் கண்ணாடி உடைந்தது. பேருந்து ஓட்டுநர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை காவல்துறையினர் கைது
செய்தனர். கரூர் பேருந்து நிலையம் அருகே சிலர் வற்புறுத்தி
கடைகளை அடைத்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளின்
கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர்
76 பேரை கைது செய்யப்பட்டனர். தேனியில்
40 பேர் சாலை மறியலில் ஈடுபட முயன்றபோது காவல்துறையினர் கைது செய்தனர். கம்பத்தில்
முன்னாள் டெல்லி பிரதிநிதி செல்வேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன்
உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர். ஆண்டிப்பட்டி, தேவதானப்பட்டியில் மறியலில் ஈடுபட்ட
150 பேர் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல்லில் காமராஜர் சிலை அருகே தி.மு.க.வினர்
சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பேரவைத்தலைவர் உருவபொம்மையை எரித்தனர். இதையடுத்து
200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பழனி பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்ட
101 பேர் கைது செய்யப்பட்டனர். கொடைக்கானலில் மறியலில் ஈடுபட்ட 60 பேரும், நிலக்கோட்டையில்
50 பேரும், நத்தத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர். நெல்லையில் அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட
75 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். புளியங்குடியில் 25 பேரையும், அம்பாசமுத்திரத்தில்
50 பேரையும், கல்லிடைக்குறிச்சியில் 45 பேரையும், வி.கே.புரத்தில் 33 பேரையும், தென்காசியில்
50 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு தி.மு.க.வினர்
சாலைமறியல் நடத்தினார்கள். தெற்கு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உள்பட 100-க்கும்
மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனாலும்- தமிழக மக்கள் வழங்கிய
தீர்ப்பை வைத்துக் கொண்டு அவர்கள் அடுத்து வழங்கப் போகிற தீர்ப்பை கணிக்கவே முடியாது
என்பது தாம் வரலாறு. அடுத்து தமிழக
மக்கள் வழங்கப் போகிற தீர்ப்பில் யார் யார் நிற்கப் போகின்றார்கள்! யார் யார் அடித்துச்
செல்லப் போகின்றார்கள் என்பதைப் பொறுத்திருந்து
பார்ப்போம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



