குடும்ப அட்டைகளுக்கு கடைகளில் பொருட்களை வாங்க ஆதார் அட்டை எண் அவசியம் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டை எண் இல்லாதவர்கள் ஜுன் 30-ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நடுவண் அரசு அறிவுறுத்தியுள்ளது. பண பரிவர்த்தனைகள் உட்பட அனைத்திற்கும் நடுவண் அரசு ஆதார் எண்ணை கட்டாயமாக்கி வருகிறது. அந்த வகையில் குடும்ப அட்டைகளுக்கு கடைகளில் பொருட்களை வாங்கவும் நடுவண் அரசு ஆதார் எண் கட்டாயம் என நடுவண் அரசு அறிவித்துள்ளது. அதன்படி
நடுவண் அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் சலுகைகளை பெற குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி குடும்ப அட்டைகளுக்கு பொருட்களை வாங்க ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களுக்கான நடுவண் அரசின் மானியம், சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்படுவது போல வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த நடுவண் அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக
குடும்ப அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடுவண் அரசின் சலுகைகளைப் பெற ஜுன் 30-க்குள் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் அட்டை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடுவண் அரசு தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



